டிசம்பர் 8ஆம் தேதி 13 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ”வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று தென் மேற்கு வங்கக்கடல் நோக்கி நகரும். டிச.8ம் தேதி காலையில் வட தமிழ்நாடு – புதுச்சேரி – தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய பகுதியை நோக்கி புயல் நகரக்கூடும்” என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டிசம்பர் 8ஆம் தேதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.