fbpx

தமிழகமே…! நாளை முதல் 6 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு…!

6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில், மாநில மதிப்பீட்டுப் புலம் என்ற பெயரில் திறனறித் தேர்வுகள் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட், அக்டோபர் மாதங்களில் கற்றல் விளைவு, திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு தற்போது திறன் வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நாளை முதல் டிசம்பர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வினாத்தாள் பதிவிறக்கத்தில் சிக்கல் ஏற்பட்டால் 14417 என்ற உதவி மைய எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஒவ்வொரு தேர்வும் 40 நிமிடங்களில் நிறைவு செய்யத் தக்க வகையில் 25 கொள்குறி வகை வினாக்களை கொண்டிருக்கும். மாணவர்களுக்கு தனித்தனியாக அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை அந்தத் தாள்களிலேயே மாணவர்களை குறிப்பிடச் செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாடவேளையில் சார்ந்த தேதியில் நடத்த வேண்டும். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை திருத்திவிட்டு, அதை வகுப்பு ஆசிரியர்கள் முறையாக பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

41 தொழிலாளர்களை மீட்க ஒரு மாதம் ஆகும்!… சுரங்கத்தின் மேல் செங்குத்தாக துளையிட்டு மீட்புப்பணி!

Mon Nov 27 , 2023
உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்க, அடுத்தகட்ட முயற்சியாக செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சில்க்யாரா பகுதியில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்திற்காக அமைப்படும் சுரங்கப்பாதை கடந்த 12ம் தேதி இடிந்து மண் சரிந்ததில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க அமெரிக்காவின் ஆகர் இயந்திரம் கொண்டு 57 மீட்டருக்கு கிடைமட்டமாக துளையிடும் பணி நடந்தது. ஆனால், 47 மீட்டர் வரை துளையிட்ட நிலையில் […]

You May Like