fbpx

இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான், இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கி வரும் புதியப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ‘பூவரசம் பீப்பீ’, ‘சில்லுக் கருப்பட்டி’, ‘ஏலே’ உள்ளிட்டப் படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இவர், அடுத்ததாக ‘மின்மினி’ என்றப் படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கடந்த வருடம் (2022) ஆரம்பித்ததாக இயக்குநர் ஹலிதா ஷமீம் தெரிவித்திருந்தார். ஏனெனில், குழந்தை நட்சத்திரங்களாக நடித்தவர்கள் கொஞ்சம் வளரும் வகையில் காத்திருந்து, மீண்டும் படப்பிடிப்பை நடத்தியிருந்தார் ஹலிதா ஷமீம்.

இந்தப் படத்திற்கு தான் தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகளான கதீஜா ரஹ்மான் இசையமைக்கிறார். பாடகியாக வலம் வந்த கதீஜா இந்தப் படத்தின் வாயிலாக இசையமைப்பாளராகவும் அறிமுகமாகிறார். இதுகுறித்து இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிகவும் திறமை வாய்ந்த கதீஜா ரஹ்மானுடன் ‘மின்மினி’ படத்திற்காக பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி. சிறந்த பாடகி மட்டுமின்றி திறமையான இசையமைப்பாளரும் கூட. சிறந்த இசை உருவாகிக் கொண்டிருக்கிறது” என்று கதீஜா ரஹ்மான் இசை கம்போசிங் செய்யும்போது அவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Maha

Next Post

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு!... கடந்த 6 மாதங்களில் ரகசியமாக நிறுவப்பட்ட 60000 செயலிகள் கண்டுபிடிப்பு!... முழுவிவரம் இதோ!

Tue Jun 13 , 2023
தீங்கிழைக்கும் மால்வேர் கொண்ட ஆண்ட்ராய்டு செயலிகள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் இருந்தால் உடனடியாக அவற்றை டெலிட் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சைபர் கிரைமினல்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, இறுதியில் அவர்களின் வங்கிகளில் இருந்து பணத்தை திருட பல்வேறு நூதன முறைகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் நமது ஸ்மோர்ட்போனுக்கு மால்வேரை அனுப்புவதன் மூலம் பெரும்பாலான சைபர் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் கூட இந்த மால்வேரை […]

You May Like