குளிர் காலம் மற்றும் மழைக்காலத்தில் டீ குடிப்பது ஒரு இதமான உணர்வை தரும். நாம் கட்டன் சாய், இஞ்சி டீ மற்றும் லெமன் டீ போன்றவற்றை குடித்திருப்போம். இந்த கால நிலைக்கு அரேபிய ஸ்டைலில் சுலைமானி டீ மிகவும் அருமையாக இருக்கும். இந்தக் குளிர் காலத்திற்கு ஏற்ற சுலைமானி எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்த சுலைமானி தயாரிப்பதற்கு ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இரண்டு ஏலக்காய், இரண்டு கிராம்பு, சிறிய துண்டு பட்டை, இரண்டு டீஸ்பூன் தேயிலை கொஞ்சமாக இடித்த இஞ்சி மற்றும் சர்க்கரை பாதி எலுமிச்சம்பழம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் கொதித்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய் ஆகியவற்றை நன்றாக பொடி செய்து போட வேண்டும். இவை நன்றாக கொதித்து வாசம் வரும்போது இதனுடன் தேயிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
சிறிது கொதித்ததும் இவற்றுடன் அரைத்து வைத்த இஞ்சி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும் இப்போது பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். இதனால் நல்ல நறுமணம் கிடைக்கும். இரண்டு நிமிடம் கழித்து பாத்திரத்தின் மோடியை திறந்து எலுமிச்சை சாறு பிழிந்து வடிகட்டி எடுத்தால் சூப்பரான சுலைமானி ரெடி.