fbpx

இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்ல அனுமதியா..? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்..!!

இருசக்கர வாகனத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் அதாவது ஹெல்மெட் அணிந்த படி 3 பேர் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று கேரள எம்.பி,. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு நிதின் கட்காரி பதில் அளித்துள்ளார்.

இந்தியாவில் நடுத்தர மக்கள் பெரும்பாலானோரிடம் இருசக்கர வாகனங்களே உள்ளது. அன்றாட வேலைக்கு செல்வது உள்பட தங்களின் பெரும்பாலான பயண தேவைகளுக்கு இருசக்கர வாகனங்களையே பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் மோட்டார் வாகன விதிகள் படி பைக்கில் இருவர் மட்டுமே செல்ல அனுமதி உண்டு. மூன்றாவதாக ஒருவர் பயணம் செய்தால் அபராதம் விதிக்கப்படும்.

இந்நிலையில், பைக்குகளில் 10 வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தையையும் சேர்த்து 3 பேர் பயணம் செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை கேரளாவில் எழுந்தது. கேரளாவில், முக்கிய சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படும் நடைமுறை அமலுக்கு வந்த பிறகு இந்த கோரிக்கை வலுத்தது. எனவே, பைக்கில் 3 பேர் பயணம் செய்ய அனுமதி அளிக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தை திருத்தலாமா? என்பது குறித்து கேரளாவில் ஆளும் கட்சி ஆலோசித்தது.

இதையடுத்து, கடந்த மாதம் 1ஆம் தேதி மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரிக்கு கேரள எம்.பி இளமாறம் கரீம் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ”வாகன ஓட்டி உள்பட 3 பேர் ஹெல்மெட் அணிந்து செல்ல அனுமதி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் தங்கள் அன்றாட பயணத்திற்கு பைக்குகளையே பயன்படுத்துகிறார்கள். அனைவராலும் கார் வாங்க முடியாது. எனவே, பைக்குகளில் 3 பேர் செல்ல அனுமதி அளிக்கலாம்” என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்த கோரிக்கையை திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்.

இது தொடர்பாக இளமாறம் கரீமுக்கு நிதின் கட்காரி எழுதிய கடிதத்தில், மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1998-ன் படி பைக் ஓட்டுபர் தனது வாகனத்தில் ஒருவருக்கு மேல் கூடுதலாக இன்னொருவரை ஏற்றிச்செல்ல அனுமதி இல்லை. உலகம் முழுவதிலும் இரு சக்கர வாகனங்கள் 2 பேர் மட்டுமே பயணிக்க ஏற்ற விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்படுகின்றன. எனவே, இருசக்கர வாகனத்தில் மூன்று பேரை ஏற்றி செல்வது புத்திசாலித்தனமான நடைமுறை இல்லை” என்று பதிலளித்துள்ளார்

Chella

Next Post

டிவி நிகழ்ச்சியை பார்த்து கொலை செய்ய ஆசைப்பட்ட இளம்பெண்..!! ஆசிரியையை துண்டு துண்டாக வெட்டிய கொடூரம்..!!

Mon Jun 5 , 2023
தென் கொரியாவில் கொலை செய்யும் ஆசையால் பெண் ஒருவரைக் கொன்று உறுப்புகளை சிதைத்ததற்காக 23 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கிரைம் நிகழ்ச்சிகள் மற்றும் புத்தகங்களில் வரும் கொலைகளால் ஏற்பட்ட ஆர்வத்தால் இந்த கொலையை செய்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். புத்தகங்களிலும், டிவியிலும் அறிந்த கொலையை தானே நேரடியாக செய்து பார்க்க விரும்பினார் என்று தென் கொரிய ஊடகங்கள் கூறியுள்ளன. ஜங் யூ ஜங் என அடையாளம் காணப்பட்ட அந்த இளம்பெண், […]

You May Like