போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் கடந்த சில நாட்களாக பல யு.எஃப்.ஓக்கள் பறந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்..
வேற்றுகிரகவாசிகள் அல்லது ஏலியன்கள் மற்றும் யூ.எஃப்.ஓ ஆகியவை தொடர்பான விசித்திரமான விஷயங்கள் அவ்வப்போது வெளிவந்துகொண்டே இருக்கின்றன.. பலர் வேற்றுகிரகவாசிகளையும், யூ.எஃப்.ஓக்களையும் நேரில் பார்த்ததாக கூறியுள்ளனர். ஆனால் இந்த கூற்றுகள் உண்மை என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க எந்த அதாரமும் இல்லை என்பதால் ஏலியன்கள் பற்றிய மர்மங்கள் இன்றும் தொடர்கின்றன..
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் யுஎஃப்.ஓக்கள் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியான நிலையில் தற்போது அந்த பட்டியலில் உக்ரைனும் இணைந்துள்ளது.. ஆம்.. போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஏராளமான யுஎஃப்ஒக்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது.. உக்ரைன் தலைநகர் கீவ்-ல் உள்ள விண்வெளி ஆய்வகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது..
‘Unidentified Airbnb Phenomina I’ என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றையும் அந்த ஆய்வகம் வெளியிட்டுள்ளது.. அந்த ஆய்வறிக்கையில், பல நாட்களாக தொடர்ந்து நடந்த சம்பவங்களின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. யுஎஃப்ஒக்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், வானியலாளர்கள் அத்தகைய பொருட்களை கவனித்து வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. எனினும் யுஎஃப்.ஓக்களின் தெளிவான படங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது..
இருப்பினும், உக்ரைனில் காணப்படும் யுஎஃப் ஓ.க்கள் சீனா மற்றும் ரஷ்யாவின் உயர் இராணுவ தொழில்நுட்பமாகவும் இருக்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. யுஎஃப்ஒக்களின் வேகம் மிக வேகமாக இருந்ததால் அவற்றின் படத்தைப் பிடிக்க முடியவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த யு.எஃப்ஓக்கள், 10 முதல் 12 கிலோமீட்டர் உயரத்தில் வானத்தில் தோன்றியதாகக் கூறப்படுகிறது, அதன் அளவு 3 முதல் 12 மீட்டர் வரை இருக்கலாம். இவை ராக்கெட்டுகள், ஏவுகணைகள் அல்லது மோதலில் பயன்படுத்தப்பட்ட பிற ஆயுதங்களாக இருக்கலாம் என்று சொல்வது எளிது. ஆனால் அவை என்னவென்று தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.