பூமியின் வானத்தில் வட்டமிடுவதாகக் கூறப்படும் விவரிக்கப்படாத பறக்கும் பொருள்கள்(ஏலியன்கள்) குறித்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா இன்று வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வேற்று கிரகவாசிகள் வெறும் கட்டுக்கதையா? இல்லை உண்மையிலேயே இருக்கிறார்களா? என்று கண்டறிய முயற்சியில் நாசா பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறது. பிரபஞ்ச ரகசியமாக இருக்கும் பறக்கும் தட்டுக்கள்(UFO) குறித்த ஆய்வை மேற்கொண்டு வரும் 16 பேர் கொண்ட சுதந்திரமான குழு தங்கள் ஆரம்பகட்ட கண்டுபிடிப்புகளை கடந்த மே மாதம் வெளியிட்டு இருந்தது. தில், நம்மிடம் இருக்கும் டேட்டாக்கள் மற்றும் நேரில் பார்த்ததாக சொல்பவர்கள் அளிக்கும் தகவல் ஆகியவற்றை வைத்து ஆய்வு செய்யும் போது உறுதியான முடிவுக்கு வர போதுமானதாக இல்லை. மேலும் இது தொடர்பாக உயர் தர தரவுகளை சேகரிப்பது அவசியமாகிறது” என்று கூறியிருந்தது.
இந்த நிலையில், ஏலியன்கள் அதாவது பறக்கும் தட்டுக்கள் குறித்த ஆய்வு பற்றிய அறிக்கையை நாசா வெளியிட்டுள்ளது. 33 பக்க அறிக்கைகளை ஏலியன்கள் பற்றிய ஆய்வு செய்து நாசாவின் சுதந்திரமான குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிக்கையின் படி, விவரிக்க முடியாத சூழல்களுக்கு பின்னால் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரக வாசிகள் உள்ளார்களா? என்பதை உறுதி செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், அதற்கான சாத்தியக்கூறுகளையும் நிராகரித்து விட முடியாது என்று நாசா தெரிவித்துள்ளது.
நாசா விஞ்ஞானி பில் நெல்சன் கூறுகையில், பிரபஞ்சத்தில் பூமியை போன்று வாழும் சூழலை கொண்ட கிரகத்தை நாசா கண்டறியும். யு.எப்.ஓக்கள் வேற்று கிரகவாசிகளுடையது என்று சொல்ல எந்த காரணமும் இல்லை”என்றார். யு.எப்.ஓ என்ற வார்த்தையை நாசா பயன்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடையாளம் தெரியாத அசாதாரண நிகழ்வுகள் (UAP) என்றே அழைக்கப்படும் நாசா தெரிவித்துள்ளது இன்று வெளியிடப்பட்டு இருக்கும் நாசாவின் அறிக்கையில், திருப்பு முனையை ஏற்படுத்தும் விதமாக இருக்காது என அறிக்கை வெளியாகும் முன்பே சொல்லப்பட்டது. கிட்டதட்ட அதே போலத்தான் அறிக்கையின் முடிவும் வந்துள்ளது. எனினும், புதிய பணிக்கான ஒரு தொடக்கமாக இன்றைய அறிக்கை அமையலாம் என்றும் சொல்லப்படுகிறது.