வங்க மொழி பேசும் பகுதியில் நீண்ட காலமாக வெங்காயம் அசைவ உணவு பட்டியலில் இருந்து வருகிறது.
சைவ உணவாக இருந்தாலும் அல்லது அசைவ உணவாக இருந்தாலும் வெங்காயம் அங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. மிக எளிமையான சாம்பார் சாதம் முதல் பிரியாணி வரை எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது வெங்காயம். அமெரிக்கா முதல் ஆப்பிரிக்கா வரை பல நாடுகள் வெங்காயத்தை தங்களது முக்கிய உணவாக கொண்டுள்ளன.
இந்த வெங்காயத்தை வங்க மொழி பேசும் பகுதியில் அசைவ பிரிவில் பொதுமக்கள் சேர்த்துள்ளனர். நீண்ட காலமாக அங்கு வெங்காயம் அசைவ உணவு பட்டியலில் இருந்து வருகிறது. பெரும்பாலும் வெங்காயம் அசைவ உணவுகளில் பயன்படுத்தப்படுவதால் அதனை அசைவமாக சிலர் கருதுவது உண்டு. இதேபோன்று மிளகு, பூண்டு, இஞ்சி போன்றவையும் அசைவ உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதுவும் அசைவ உணவாக அடையாளம் காணப்படுகின்றன. காய்கறி பிரிவில் வெங்காயம் இருந்தாலும் அவை அசைவம் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.