fbpx

பெண்களுக்கு மட்டும் இத்தனை வசதியா?… ஐந்து பென்சன் திட்டங்கள் இதோ!

மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் நீங்கள் அதிக வருமானம் பெறலாம். SIP திட்டத்தின் கீழ் மாதாந்திர பிரீமியத்தை செலுத்தலாம். அதே நேரத்தில், SWP (Systematic Withdrawal Plan)மூலம், வருமானம் ஈட்ட முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வூதியம் பெறலாம். அடல் பென்சன் யோஜனா ஒரு நல்ல முதலீட்டு விருப்பம் ஆகும் இந்த திட்டம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்றது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம். 60 வயதுக்கு பின் நீங்கள் 1000 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை ஓய்வூதியம் பெற முடியும்.

தேசிய பென்சன் திட்டம் என்பது பெண்களுக்கான சிறந்த ஓய்வூதிய திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் முதலீடு மற்றும் வயது அடிப்படையில் ஓய்வூதியம் கிடைக்கும். ஒரு பெண் தனது 30 வயதில் ஒவ்வொரு மாதமும் 5,000 ரூபாய் முதலீடு செய்தால், 60 வயதை எட்டிய பிறகு அவருக்கு 45,000 ரூபாய் வரை பென்சன் கிடைக்கும். எல்ஐசி ஜீவன் அக்‌ஷய் பாலிசி திட்டத்தில் இந்த வருடாந்திர திட்டம் ஒரு நல்ல முதலீட்டு விருப்பம் ஆகும். இந்த பாலிசியை 30 வயதில் வாங்கலாம். குறைந்தபட்ச கொள்முதல் விலை ரூ. 1 லட்சம். அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. இது எதிர்காலத்தில் பலனளிக்கக் கூடிய நல்ல திட்டம் ஆகும்.

யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டம் என்பது பெண்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு விருப்பமாகும். இந்தத் திட்டத்தில் ஆயுள் காப்பீட்டுடன் முதலீட்டு வசதியும் உள்ளது. முதிர்வுக்குப் பிறகு பொதுவான ஓய்வூதியப் பலனும் கிடைக்கும். எல்ஐசி உட்பட பல காப்பீட்டு நிறுவனங்கள் இந்த திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.

Kokila

Next Post

’40 ஆண்டுகால சினிமா’..!! ’முண்டாசுப்பட்டி’ திரைப்பட பிரபலம் மதுரை மோகன் காலமானார்..!!

Sat Dec 9 , 2023
இந்த ஆண்டு நம் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த பல கலைஞர்களை நாம் இழந்துள்ளோம். மனோபாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர்.எஸ். சிவாஜி, ஜூனியர் பாலையா என பல திறமையான பிரபலங்கள் நம்மைவிட்டு பிரிந்துள்ளனர். இவர்களின் மரணம் கொடுத்த துயரமே நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு நல்ல நடிகரை இழந்துள்ளோம். 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பயணித்து வரும் நடிகர் மதுரை மோகன் இன்று காலை மரணமடைந்துள்ளார். 40 ஆண்டுகளாக இவர் சினிமாவில் […]

You May Like