fbpx

’குற்றம்சாட்டியவர்கள் யோக்கியமா’? ’விளைவுகளை அனுபவிப்பார்கள்’..!! கோபத்துடன் பேசிய கமல்..!!

‘பிக்பாஸ் சீசன் 7’ நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் காரசாரமான சண்டைகள் என்றாலும், மற்றொருபுறம் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம், போட்டியாளர்கள் சிலர் பிரதீப் மீது வைத்த அவதூறான குற்றச்சாட்டால், மிகவும் ஸ்ட்ராங் கண்டெஸ்ட்டாக பார்க்கப்பட்ட பிரதீப்புக்கு கமல்ஹாசன் ரெட் கார்டு கொடுத்தார். மேலும் கமல் பெரும்பாலும் அரசியல் நோக்கத்திலேயே பேசியதாலும், தன்னுடைய முடிவை மேனேஜ்மேண்ட் ஏற்று கொண்டது என்பது போல் பேசியதால் கமல்ஹாசன் தான் பிரதீப்பை வெளியே அனுப்ப முக்கிய காரணமா? என்று பலர் கேள்வி எழுப்பினர்.

ஒரு பக்கம் பிக்பாஸ் போட்டியாளர்களின் குற்றச்சாட்டுக்கு குறும்படம் போட்டு பதிலடி கொடுத்த பிரதீப்பின் ரசிகர்கள், கமல் தீர விசாரிக்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்ததாகவும் குற்றம் சுமத்தி வந்தனர். எனவே, இந்த வாரம் கமல் தன் மீதான தவறை ஒப்புக்கொள்வாரா? அல்லது தன்னுடைய தீர்ப்புக்கு நியாயம் சொல்லும் விதத்தில் பேசுவாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அந்த வகையில் தன்னுடைய முதல் புரோமோவில் கமல்ஹாசன் கூறியுள்ளதாவது, “தீர விசாரித்ததாலேயே வந்த தீர்வு இது… இது தீர்ப்பு அல்ல. குற்றம் செய்தவர்கள் அதற்கான விளைவுகளை அனுபவித்தே ஆக வேண்டும். உலக நியதி!! குற்றம்சாட்டியவர்கள் யோக்கியமா? இந்த கேள்விக்கு அவர்கள் நடத்தை பதில் சொல்லும். அதற்கான விளைவுகளை அவர்கள் அனுபவிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Chella

Next Post

எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமி..!! லேப் டெக்னீஷியன் செய்த மோசமான காரியம்..!! அலறியடித்து ஓட்டம்..!!

Sat Nov 11 , 2023
எக்ஸ்ரே எடுக்கச் சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த லேப் டெக்னீஷியனை காவல்துறையினர் கைது செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பல்வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பரிசோதனை மையத்திற்கு எக்ஸ்ரே எடுப்பதற்காக சிறுமி தனது பெற்றோருடன் சென்றுள்ளார். அங்கு லேப் டெக்னீஷியனாக வேலை செய்த சூரஜ் ஷிண்டே என்பவர் தனி அறையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். அத்துடன் அங்கிருந்து […]

You May Like