RBI: எதிர்பாராத மற்றும் சட்டவிரோத செயல்கள் காரணமாக பழைய 5 ரூபாய் நாணயங்களை நிறுத்துவதற்கான தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கனரக உலோக உள்ளடகத்திற்கு பெயர்பெற்ற இந்த நாணயங்கள், கடத்தல்காரர்களின் இலக்காக மாறியுள்ளது. அதாவது, எந்தவொரு நாணயத்திற்கும் அதன் உலோக மதிப்பு மற்றும் விலை என இரண்டு வகையான மதிப்பு உண்டு. நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள எண் அதன் விலை மதிப்பைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு நாணயத்தில் ஐந்து என்று எழுதப்பட்டு இருந்தால் அது அந்த நாணயத்தின் விலையைக் குறிக்கும்.
பழைய 5 ரூபாய் நாணயத்தை உருக்கியபோது, அதன் உலோக மதிப்பு விலை மதிப்பைவிட அதிகமாக இருந்தது. இதனால் அந்த நாணயத்தை உருக்கி பிளேடு தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். இதனால் பழைய 5 ரூபாய் நாணயங்களைச் சிலர் தவறாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இதன் எதிரொலியாகவே அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் (ஆர்பிஐ) முக்கிய முடிவை எடுத்தன.
பழைய ஐந்து ரூபாய் நாணயங்கள் மிகவும் தடிமனாக இருப்பதை நீங்களும் கவனித்திருப்பீர்கள். எனவே அவற்றைத் தயாரிக்க நிறைய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. நாணயம் மற்றும் ஷேவிங் பிளேடு இரண்டும் ஒரே உலோகத்தால் செய்யப்பட்டவை. இந்த விஷயம் தெரிந்ததும் சிலர் அதை சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். இதனால், பழைய 5 ரூபாய் நாணயங்கள் தவறான வழிகளில் வங்கதேசத்திற்குக் கடத்தப்பட்டன.
அங்கு இந்த நாணயங்கள் உருகப்பட்டு, அந்த உலோகத்திலிருந்து பிளேடுகள் செய்யப்பட்டன. ஒரு நாணயத்தை உருக்கி ஆறு பிளேடுகள் செய்ய முடிந்தது. ஒரு பிளேடு 2 ரூபாய் வீதம், 12 ரூபாய்க்கான பிளேடுகளை ஒரே ஒரு 5 ரூபாய் நாணயத்திலிருந்து தயாரிக்க முடியும். இதனால், கடத்திச் செல்லப்பட்ட 5 ரூபாய் நாணயங்களை பயன்படுத்தி அங்குள்ள மக்கள் மிகவும் பயனடைந்தனர்.
இதனால் சந்தையில் 5 ரூபாய் நாணயங்கள் குறைந்து வருவதை கவனித்த அரசாங்கம் புதிதாத 5 ரூபாய் நாணயங்களைக் கொண்டுவர நடவடிக்கையை எடுத்தது. அதன்படி, ரிசர்வ் வங்கி 5 ரூபாய் நாணயங்களை முன்பைவிட மெல்லியதாக மாற்றியது. மேலும், நாணயங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோகத்தையும் மாற்றியமைத்துள்ளது.