fbpx

மாணவர்களே பொதுத்தேர்வுக்கு ரெடியா..? ஹால்டிக்கெட் வந்துருச்சு..!! எப்படி டவுன்லோடு செய்வது..?

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 1ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி, அரசுத் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகளை, வரும் 20ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் 20ஆம் தேதி பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, “online portal” என்ற வாசகத்தினை ‘click’ செய்து “HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024” என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

அத்துடன், அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை குறிப்பிட்ட தேதிக்குள் பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் கொளுத்தப்போகும் வெயில்..!! வெளியில் போகும்போது ஜாக்கிரதை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Fri Feb 16 , 2024
தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலையானது இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. நாளை முதல் (பிப்ரவரி 17) முதல் 21ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 […]

You May Like