fbpx

மாணவர்களே ரெடியா..? மருத்துவ காலியிடங்கள்..!! கலந்தாய்வு தேதியை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவற்றுக்கான தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11,000 இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதமான 1650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், மத்திய அரசின் இடங்களில் 86 இடங்கள் நிரப்பப்படவில்லை.

இதை வீணாகாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி தர வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், காலியாக உள்ள 86 எம்பிபிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது.

அதன்படி, மத்திய அரசு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நவம்பர் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சுகாதார இயக்குநரகம் அறிவித்துள்ளது.

கலந்தாய்வு குறித்த தகவல்களுக்கு tnmedicalselection.org என்ற இணையதளத்தில் பார்வையிட தேர்வுக்குழு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அகில இந்திய ஒதுக்கீடு-16, நிகர்நிலைப் பல்கலைக்கழகம்-50, எய்ம்ஸ்-3, சுயநிதி 17 என 86 இடங்கள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

’அனுமதி வழங்க கூடாது’..!! ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!!

Tue Oct 31 , 2023
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாகவும், அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டும் விஜயதசமி நாளன்று ஆர்எஸ்எஸ் சார்பாக பேரணி நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதங்களை கேட்ட நீதிபதி, அணிவகுப்புக்கு அனுமதி […]

You May Like