முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ஜூலை 7ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின்னர் இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும்.
முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் இணைந்து கொள்ள முடியும். அந்த வகையில், மார்ச் 3ஆம் தேதி நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிந்தது. ஆனால் தற்போது, ஜூலை 7ஆம் தேதி நடக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.