fbpx

பற்களில் மஞ்சள் கரை இருக்கிறதா.? இந்த ஒரு பொருள் போதும் உங்கள் பற்கள் பளபளக்க.! ட்ரை பண்ணி பாருங்க.!

புன்னகை என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று. அவ்வாறு புன்னகைக்கும் போது நமது பற்கள் மஞ்சளாகவோ இல்லை கரைப்படைந்தோ இருந்தால் அது நமக்கு அவசரத்தை ஏற்படுத்தலாம். இதனால் பற்களை தூய்மையாகவும் வெண்மையாகவும் வைத்துக் கொள்வதை அனைவரும் விரும்புவோம். இதற்காக பல ஆயிரங்களை செலவு செய்யாமல் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து பற்களை எவ்வாறு வெண்மையாக மாற்றலாம் என பார்ப்போம்.

பற்களின் மஞ்சள் கறைகளை போக்குவதற்கும் வெண்மையாக்குவதற்கும் இயற்கையாக பயன்படக்கூடிய ஒரு பொருள் என்றால் அது வேம்பு. இதில் இருக்கக்கூடிய பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் மற்றும் இங்கே எதிர்ப்பு பண்புகள் பற்களில் கிருமி தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வேப்ப மரத்தின் இலை பற்களில் இருக்கும் கரைகளை நீக்குவதோடு அந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

வேப்பங்குச்சியில் பல் விலக்குவதன் மூலம் பற்களின் ஆரோக்கியம் மேம்படுவதோடு பற்கள் உறுதியடையும் செய்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய கால்சியம் பற்களை வலுப்படுத்துகிறது. மேலும் பல் சொத்தை போன்ற ஏற்படாமல் தடுக்கவும் எதிர்ப்பு காரணியாக விளங்குகிறது. வேப்ப மரக் குச்சிகள் மற்றும் இலைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பற்பசைகளை பயன்படுத்துவதன் மூலம் பற்கள் கரையற்றதாகவும் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

உலர்ந்த வேப்ப மரத்து இலைகளை அரைத்து தயாரிக்கப்படும் வேப்பம் பொடியுடன் பேக்கிங் சோடா கலந்து பயன்படுத்தும் போது பற்கள் பளபளப்பானதாகவும் வெண்மையாகவும் மாறும். இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது பற்களில் இருக்கும் மஞ்சள் மற்றும் கரைகள் நீங்கும். கிருமிகள் தொற்றிலிருந்தும் தீர்வு கிடைக்கும்.

Kathir

Next Post

இன்று கடலோர தமிழகத்தில் பலத்த மழை...! இந்த 9 மாவட்ட மக்கள் எல்லாம் உஷாரா இருங்க...!

Mon Nov 20 , 2023
குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் […]

You May Like