பெரும்பாலும் நெய் என்றாலே சிறிவர்கள், முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கிறது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து விடும் என்பதால் இதனை பலரும் தவிர்க்கிறார்கள்.
மிதமான வெந்நீரில் ஒரு ஸ்பூன் தூய பசு நெய்யை விட்டு கலந்து இரவில் உறங்க செல்வதற்கு முன்னதாக 30 நிமிடங்களுக்கு முன் சாப்பிட வேண்டுமாம். ஒரு ஆய்வின்படி நெய்யில் பியூரிட்டிக் அமிலம் அதிகமாக இருக்கிறது. என்று சொல்லப்படுகிறது.
இது மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பரபரப்பான சருமத்திற்கும் இது உதவியாக உள்ளது. காலை வேளையில் வெறும் வயிற்றில் வெந்நீரில் நெய் கலந்து சாப்பிடுவதால் உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது என்றும் சொல்லப்படுகிறது. காலை வேளையில் வெறும் வயிற்றில் வெண்ணீரில் நெய் விட்டு உண்பதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
நெய் சாப்பிடுவதால் மூட்டுகளில் இயற்கையாக மாசக் எண்ணெய் உருவாவது தூண்டப்படுகிறது. என்றும் கூறப்படுகிறது. இது எலும்பு தேயாமல் இருக்க உதவியாக உள்ளது. நெய் சாப்பிடுவதால் எலும்புகள் வலுவடையும் என்று சொல்லப்படுகிறது. இதில் இருக்கின்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் எலும்பு நோயை தடுப்பதுடன் கொழுப்பை குறைக்க உதவியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மூளை செல்களின் சரியான பராமரிப்பு மேம்பாட்டிற்கு நெய் உதவி புரிவதோடு நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. பால் பொருட்கள் மீது ஒவ்வாமை இருப்பவர்களும் கூட இதனை உண்ணலாம் என்றும் சொல்லப்படுகிறது.