விஜய் பிறந்தநாளுக்கு செம சர்ப்ரைஸ் காத்திருக்கு..!! ரீ-ரிலீஸ் ஆகும் மற்றொரு மெகாஹிட் திரைப்படம்..!!

விஜய்யின் பிறந்தநாளன்று மற்றொரு மெகா ஹிட் திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்த படம் கில்லி. படத்தில் விளையாடுவது கபடியாக இருந்தாலும், கில்லி என்று பெயர் வைக்கப்பட்ட இந்த திரைப்படம் சொல்லியடித்து வசூலை வாரிக்குவித்தது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கில்லி திரைப்படம், உலகம் முழுவதும் ரூ.50 கோடி வசூலை அள்ளியது. இதன் முலம், தமிழ் சினிமாவில் ரூ.50 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையைப் பெற்றது.

இந்நிலையில் தான், இப்படம் அண்மையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போதும் வசூலை குவித்த நிலையில், மற்றொரு விஜய் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரியும். அன்றைய தினம் தான், அவரது ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, கில்லி திரைப்படத்தைப் போலவே, மெகா ஹிட் அடித்த துப்பாக்கி திரைப்படத்தை வரும் ஜூன் 21ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

Read More : யாருக்கெல்லாம் மத்திய அமைச்சர் பதவி..? சந்திரபாபு நாயுடு கட்சிக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு..? வெளியான லிஸ்ட்..!!

English Summary

It has been reported that another mega hit film is also planned to be re-released on Vijay’s birthday.

Chella

Next Post

குடிபோதையில் கத்தியுடன் உலா வந்த ரவுடி..!! மடக்கி பிடித்த போலீஸ்..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

Sun Jun 9 , 2024
CCTV footage of the police arresting a drunken knife-wielding robber in Vannarappat has been released.

You May Like