உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைத்திருக்க உதவும் உளுந்து கஞ்சி குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கருப்பு உளுந்து
பாதாம் பருப்பு
முந்திரி
நெய்
தேங்காய்
வெந்தயம்
ஏலக்காய்
பனை வெல்லம்
செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் 100 கிராம் கருப்பு உளுந்து பருப்பு மற்றும் 1/4 தேக்கரண்டி வெந்தயம் சேர்க்க வேண்டும். பிறகு அதில் தண்ணீர் ஊற்றி 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
* பின்னர், ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊறவைத்த கருப்பு உளுந்து மற்றும் வெந்தயத்தை போட்டு நன்கு அரைத்து பேஸ்டாக்கி கொள்ள வேண்டும்.
* பின்னர், அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1/2 கப் தண்ணீர் சூடாக்கிக் கொள்ளவும். பிறகு அரைத்த உளுந்து மாவு மற்றும் பனை வெல்லம் சேர்த்து மிதமான தீயில் நன்கு காய்ச்சவும்.
* ஒரு கப் தேங்காய் துருவலை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். இதை கொதிக்கும் உளுந்து கஞ்சியில் சேர்த்து கலக்கி விடவும்.
* மற்றொரு அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் நறுக்கிய முந்திரி மற்றும் நறுக்கிய பாதம் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* இதை கொதிக்கும் உளுந்து கஞ்சியில் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் வாசனைக்காக சிறிது ஏலக்காய் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் உடலுக்கு வலிமை தடும் உளுந்து கஞ்சி ரெடி.
Read More : தண்ணீர் பற்றாக்குறையால் உணவு உற்பத்தி பாதியாக குறையும் அபாயம்..!! வெளியான பரபரப்பு ஆய்வறிக்கை..!!