நாளை முதல் பிப்ரவரி மாதம் தொடங்கும் நிலையில், வங்கிகளுக்கு எப்போது விடுமுறை என்று தெரிந்து கொண்டு கவனமாக இருப்பது நல்லது. ஏனென்றால் சிலர் வங்கி விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வதன் மூலம் முன் கூட்டியே உங்களது வங்கி சேவையினை திட்டமிட்டு செய்து கொள்ள முடியும். அதன்படி பிப்ரவரி மாதத்தில் வார இறுதி நாட்கள் உட்பட பண்டிகை காலங்களுடன் சேர்ந்து 9 நாட்கள் விடுமுறை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
அதன்படி, பிப்ரவரி மாத வங்கி விடுமுறை பட்டியல்:
பிப்ரவரி 5, 2023 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 11, 2023 – சனிக்கிழமை – இரண்டாம் சனிக்கிழமை
பிப்ரவரி 12, 2023 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 18, 2023 – சனிக்கிழமை – மகா சிவராத்திரி (குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டும்)
பிப்ரவரி 19, 2023 – ஞாயிற்றுக்கிழமை
பிப்ரவரி 20, 2023 – திங்கட்கிழமை – மாநில தினம் (அருணாச்சல பிரதேசம், மிசோரம் மட்டும்)
பிப்ரவரி 21, 2023 – செவ்வாய்க்கிழமை – லூசார் (சிக்கிம் மட்டும்)
பிப்ரவரி 25, 2023 – சனிக்கிழமை – 4வது சனிக்கிழமை
பிப்ரவரி 26, 2023 – ஞாயிற்றுக்கிழமை
மேலும் தமிழகத்தை பொறுத்தவரை பிப்ரவரி மாதத்தில் பண்டிகை காலங்கள் எதுவும் இல்லாததால் வார விடுமுறை தவிர எந்த விடுமுறை நாட்களும் இல்லை.