fbpx

பீர்க்கங்காயில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கா..? எடை குறைப்புக்கு சூப்பர் காய்கறி..!!

பொதுவாக வெப்பமண்டலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஒரு சத்தான காய்கறி தான் பீர்க்கங்காய். இதில், கலோரிகள் குறைவாக மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. ஹெல்தி டயட்டை பின்பற்ற வேண்டும் என நினைப்பவர்களுக்கு பீர்க்கங்காய் சிறந்த தேர்வாக இருக்கும். பீர்க்கங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. டயட்டில் பீர்க்கங்காயை சேர்ப்பதால் கிடைக்கும் முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரத்த சர்க்கரையின் அளவை சீராக்குகிறது :

பீர்க்கங்காயில் Charantin என்ற காம்பவுன்ட் உள்ளது. இது ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்லது நீரிழிவு நிலைமையை உருவாக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு பீர்க்கங்காய் ஒரு சிறந்த காய்கறியாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து ரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சுவதை மெதுவாக்கவும், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி :

பீர்க்கங்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி என்பது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இந்த பச்சை காய்கறியில் துத்தநாகம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பிற வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளன. இவை ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க அத்தியாவசியமானவை.

செரிமானம் மேம்படுகிறது :

பீர்க்கங்காயில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை தடுக்கவும் உதவுகிறது. இந்த காய் ஒரு இயற்கை மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் குடல் இயக்கம் சீராக இருக்கும். இந்த காய் இரைப்பை குடல் பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது :

பீர்க்கங்காயில் வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் உள்ளன. இவை ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களால் சருமம் சேதமாகாமல் பாதுகாக்க உதவுகிறது. இதுதவிர இந்த காயில் சருமம், கூந்தல் மற்றும் நகங்களை பராமரிக்க அவசியமான ஒரு மினரலான சிலிக்கா உள்ளது. எனவே, பீர்க்கங்காயை தொடர்ந்து டயட்டில் சேர்ப்பது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் முன்கூட்டிய வயதாகும் அறிகுறிகளை தடுக்க உதவும்.

Chella

Next Post

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! மத்திய அரசின் அதிரடி உத்தரவு..!! மிகப்பெரிய அளவில் மாற்றம்..!!

Sat May 6 , 2023
சமையல் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டிருப்பதால் விரைவில் விலை குறைய வாய்ப்புள்ளது. சமையல் எண்ணெய்களை உலகளவில் அதிகம் இறக்குமதி செய்யும் முக்கியமான நாடுகளில் ஒன்றான இந்தியா, 2021-22 நிதியாண்டில் (நவம்பர்-அக்டோபர்) ரூ.1.57 லட்சம் கோடி மதிப்புள்ள சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்துள்ளது. இந்தியா பொதுவாக மலேசியா மற்றும் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை வாங்குகிறது. சோயாபீன்ஸ் எண்ணெய்யை […]

You May Like