fbpx

மாங்கொட்டையில் இவ்வளவு மருத்துவ பயன்களா!… பல்வேறு நோய்களை குணப்படுத்தும் தன்மை!… ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

மாங்கொட்டை தூளை ஒரு டீஸ்பூன் அளவு உட்கொண்டால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் உள்ளிட்ட வயிறு தொடர்பான நோய்கள் கட்டுப்படும். மேலும் இதில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள் குறித்து அறிந்துக்கொள்ளலாம்.

இரத்தத்தில், ஹீமோகுளோபின் என்ற இரத்த சிவப்பணு குறையும்போது, இரத்த சோகை பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், நரம்புகளிலுள்ள பிராணவாயுவின் இயக்கம் குறைகிறது. ஹீமோகுளோபின், இரத்தத்தில் பிராணவாயுவை அதிகம் சேர்க்கும். இரத்த சோகை, பெரும்பாலும், பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இந்த பிரச்சனைகளுக்கு மாங்கொட்டை பெரிதும் பலனளிக்கிறது.

அதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்சிடென்டுகள் அதிகம் இருக்கின்றன. மாங்கொட்டைகளில் செரிமானத்தை அதிகரிக்கும் பினோலிக் கலவைகள் நிறைந்துள்ளன. செரிமானக்கோளாறு, அசிடிட்டி பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் மாங்கொட்டை பருப்பை வெயிலில் உலர்த்தி, தூளாக்கி உட்கொள்ளலாம். அதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் செரிமானத் திறனை மேம்படுத்தக்கூடியவை. அது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.

மாங்கொட்டைகளை நன்கு காயவைத்து, அவற்றை உடைத்து, பருப்பை எடுத்து, சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, வாணலில் நெய்விட்டு, அதில் மாம்பருப்பை இட்டு, வறுத்து, ஆறவைத்து, அரைத்து, பொடியாக வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை, தினமும் தேனில் குழைத்து, சாப்பிட்டு வரவேண்டும். மாங்கொட்டைப் பருப்பை பொடியாக்கி, நெய்யில் கலந்து சாப்பிட, கர்ப்பிணிப் பெண்களின் கரு வளர்ச்சி சீராக அமையும். மாம்பருப்பில் உள்ள வைட்டமின் A, பேறுகாலத்தில் பெண்களுக்கு நன்மைகளை அளிக்கிறது.

உடல் எடைக் குறைப்பிற்கு, உணவுக்கட்டுப்பாடு அவசியம், அதற்கு, மாங்கொட்டை உதவிசெய்யும். மாம்பருப்பு பொடியை நெய்யில் கலந்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வரலாம்.இரத்த நாளங்கள் தடைபடுவதால் ஏற்படும், அதிக இரத்த அழுத்த பாதிப்புகளையும், மாங்கொட்டை சரிசெய்யும். மாம்பருப்பு பொடியை, தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். கண் பார்வையும் தெளிவு பெறும்.

மாங்கொட்டையிலுள்ள பருப்பைப்பொடியாக்கி, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர, இதயத்துக்கு செல்லும் இரத்த ஓட்டம் சீராகி, இதயம், துடிப்பாக செயல்படும். இதனால், இதய நோய்கள் ஓடிவிடும்.
சர்க்கரை பாதிப்புள்ளவர்கள் மாங்கொட்டையின் பருப்பு, அருமருந்து. மாம்பருப்பு தூளை, நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரலாம். உணவில் துவையலாக, குழம்பாக சேர்த்து வரலாம். இரத்தத்திலுள்ள சர்க்கரையளவை, மிகாமல் பராமரிப்பதன்மூலம், உடலில் சர்க்கரை பாதிப்பின் அறிகுறிகளை, நெருங்கவிடாது.

Kokila

Next Post

இதுக்கு ஒரு முடிவே இல்லையா!... விடாமல் துரத்தும் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள்!... ஷாக் கொடுக்கும் சர்வே முடிவுகள்! விவரம் உள்ளே!

Thu Feb 23 , 2023
தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்திருந்த போதிலும் தேவையற்ற அழைப்புகள் வருவதாக 92 சதவீதம் பேர் கருத்துக்கணிப்பில் பதிலளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைவரிடமும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில், முக்கியமான வேலையில் இருக்கும் போது திடீரென புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரும். போனை எடுத்தால், லோன் வேண்டுமா சார். கிரெடிட் கார்டு வேண்டுமா சார், […]

You May Like