fbpx

நீங்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? ரூ.35,000 சம்பளத்தில் வேலை..!! விண்ணப்பிக்க இன்றே கடைசி..!!

மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகிய மணிமண்டபங்களில் உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோரின் வயது 01.07.2024 தேதியின் படி குறிப்பிட்ட வயதிற்குள் இருக்க வேண்டும். BC பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். MBC பிரிவை சேர்ந்தவர்கள் 18 முதல் 34 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும். மேலும், SC பிரிவை சேர்ந்தவர்கள் 18 வயது முதல் 37 வயதுக்குள்ளானவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதியை பொறுத்தவரை தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தில் அடிப்படை தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும். நூலகர் மற்றும் காப்பாளர் பதவிகளுக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் Certificate in Library and Information Science படிப்பில் சான்றிதழ் பெற்றவராக இருத்தல் வேண்டும்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 7-வது ஊதியக் குழுவின்படி மாதம் ரூ.20,000 வரையும், நூலகர் மற்றும் காப்பாளர் பணிகளுக்கு மாதம் ரூ.7,700 முதல் ரூ.24,000 வரையும், உயிரியலாளர் பதவிக்கு மாதம் ரூ.35,000 சம்பளமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியுடையவர்கள் https://thoothukudi.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்பலாம்.

தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10.10.2024 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கு விண்ணப்பிக்க 18.10.2024 கடைசி தேதியாகயாகும். மேலும், உயிரியலாளர் பணிக்கு விண்ணப்பிக்க 5.10.2024 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More : பிக்பாஸில் அதிக சம்பளம் வாங்கும் போட்டியாளர்கள் யார் தெரியுமா..? ஒன்னுமே பண்ணாத இவருக்கு இவ்வளவா..?

English Summary

10.10.2024 has been announced as the last date to apply for the post of Technical Assistant.

Chella

Next Post

ஆர்க்டிக் கடற்பரப்பிற்கு அடியில் மற்றொரு உலகம்? - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

Thu Oct 10 , 2024
Another world with six-storey buildings beneath the Arctic? Here's what scientists found on its seafloor

You May Like