fbpx

ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான்கார்டு வைத்திருப்பவரா நீங்கள்..! உடனே இதை பண்ணுங்க.. 30 நாட்களில் சரி ஆகிவிடும்..!

பான்கார்டுடன் ஆதார் என்னை இணைக்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு முதல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த அவகாசம் முடிவுற்றது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துள்ளது, அனைவரின் பணியும் பாதியில் முடங்கியது.

உங்களிடம் செயலிழந்த பான் கார்டு இருந்தால், அதை செயல்படுத்த ல் ரூ. 1,000 அபராதம் செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பித்த ஒரு மாதத்திற்கு (30 நாட்கள்) பிறகு தான் உங்கள் பான் கார்டு செயல்படுத்தப்படும்.

பான் கார்டை செயல்படுத்த அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.incometax.gov.in/iec/foportal/ -க்கு செல்ல வேண்டும். ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கையுடன் தொடரவும். அடுத்து, விவரங்களைப் பூர்த்தி செய்து, ஆதார்-பான் இணைக்கும் கோரிக்கை சமர்ப்பிப்பிற்கு, CHALLAN NO./ITNS 280ஐக் கிளிக் செய்யவும். கட்டணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, முழுமையான முகவரியுடன் மதிப்பீட்டு ஆண்டை (AY) தேர்ந்தெடுத்து PAN ஐ உள்ளிடவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு சமர்ப்பிப்பதைத் தொடருவதே கடைசிப் படியாகும். உங்கள் பான் கார்டை செயல்படுத்த ஒரு மாதம் ஆகும்.

மேலும் பான் கார்டை ஆக்டிவேட் செய்ய ஜன் சுவிதா கேந்திராவை அடைய வேண்டும், அங்கு நீங்கள் இந்த வேலையை வசதியாகச் செய்யலாம். இங்கு ஜன் சேவா கேந்திராவிற்கு ரூ.1,000 மற்றும் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பித்த 30 நாட்களுக்குப் பிறகு உங்கள் பான் கார்டு வேலை செய்யத் தொடங்கும்.

Kathir

Next Post

#Rain Alert: இந்த 15 மாவட்ட மக்கள் எல்லாரும் உஷாரா இருங்க...! இன்று கனமழை எச்சரிக்கை...!

Thu Aug 31 , 2023
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, […]

You May Like