fbpx

போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்குபவரா நீங்கள்?… உங்களுக்கான எச்சரிக்கை பதிவு!

தலை முதல் கால் வரை போர்வையால் போர்த்திக்கொண்டு தூங்குவது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இப்படி தூங்குவதால் நம் உடலில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படுகிறதாம்.

குளிர்காலம் வந்துவிட்டாலே, இரவு தூங்கும் போது அழுத்தமாக தலை முதல் காலை வரை போர்த்திக் கொண்டு தான் நம்மில் பலரும் உறங்கச் செல்வோம். ஆனால் வெயில் காலத்திலும் சிலர் போர்வை இல்லாமல் தூங்குவதில்லை. குளிர்காலமோ வெயில் காலமோ எதுவாயினும் தலைமுதல் கால் வரை போர்த்திக்கொண்டு தூங்கும் பழக்கத்தை சிலர் கடை பிடித்து வருகின்றனர். இது இது மிகவும் ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றன. இப்படி தூங்குவதால் ஏற்படும் பாதிப்புகளை குறித்து விரிவாக பார்க்கலாம்.

குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால், ஒரு இடைவெளி கூட இல்லாமல் முழுவதுமாக போர்வையால் மூடிக்கொண்டு தூங்குவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. போர்வையால் வாய் மற்றும் மூக்கை மூடினால், பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முழு உடலையும் போர்வையால் மூடுவது ஆக்ஸிஜனின் ஓட்டத்தைத் தடுக்கிறது. இதனால் இருதய பாதிப்புகள் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகிறது.

மூளைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைப்பது என்பது ஆரோக்கியத்தின் தலையாய பணியாகும். ஆனால் போர்வை முழுவதுமாக இடைவெளியின்றி மூடிக்கொண்டால் சுவாசிப்பது கடினமாகிவிடும். இதனால் இரவில் சரியாக தூங்க முடியாத நிலையை உருவாக்கும். இதுதொடரும் பட்சத்தில் மிகவும் சோர்வாக உணர்வீர்கள். தலைவலி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தூக்கமின்மையால் மனநலம் முற்றிலும் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

உடலுக்கு ஆக்ஸிஜன் சப்ளை குறைந்தால், வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். இதனால் உங்கள் உடலில் கொழுப்பு வேகமாக சேரும். அதையடுத்து உடல் எடை அதிகரித்து, சில நாட்களில் உடல் பருமனாகிவிடும். அதை தொடர்ந்து மாரடைப்பு, பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம் போன்ற பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. அதனால் குளிர் என்றாலும், உடலை முழுவதுமாக போர்வையால் போர்த்திக்கொள்ளாதீர்கள். அவ்வப்போது சற்று உடலை விட்டு போர்வையை விலக்கி எடுத்து உறங்க பழகுங்கள்.

Kokila

Next Post

சிரிக்கும்பொழுது(laugh) நம் உடலில் என்னென்ன அதிசயங்கள் நிகழ்கிறது தெரியுமா?… சுவாரஸ்ய தகவல்கள்!

Sat Sep 23 , 2023
வாய்விட்டு சிரித்தால்(laugh) நோய் விட்டு போகும் என்று பெரியவர்கள் என்ன சும்மாவா சொன்னார்கள்… நாம் சிரிக்கும் பொழுது நம்முடைய உடலிலும், மனதிலும் உள்ள அழுத்தங்களும், கவலைகளும் வெளியேறுகிறது. ஒருவர் நன்றாக சிரித்த பிறகு அவருடைய மன அழுத்த ஹார்மோன்களின் அளவுகள் குறைந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. சந்தோஷமாக சிரிப்பது உங்களுடைய தசைகளை 45 நிமிடங்கள் வரைக்கும் தளர்வாக வைத்திருக்கிறது. சிரிப்பு நம்முடைய மனதையும் உடலையும் வலிமையோடு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் […]

You May Like