சிலர் காலையில் அலுவலகம் கிளம்பும் வேகத்தில் காலை உணவை தவிர்த்துவிடுகின்றனர், சிலரோ வேறு சில காரணங்களால் காலை உணவை தவிர்த்து வருகின்றனர். இதனால், நம் உடலுக்கு நன்மை செய்வதற்குப் பதிலாக, நாமே தீங்கு விளைவிப்பதோடு, இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இப்படி காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
காலையில் அவசர அசரமாக சாப்பிடாமல் வேலைக்கு செல்பவர்களுக்கு அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படும். நீண்டகாலமாக காலை உணவை தவிர்த்து வருபவர்களுக்கு, அஜீரணம், இரைப்பை அழற்சி(gastric inflammation), நெஞ்செரிச்சல், வயிற்றுப்புண் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
உடல் எடையைக் குறைக்க சிலர் காலை உணவை தவிர்த்திவிடுவர், இது பலனையும் தரும். ஆனால் நீங்கள் நீண்ட நேரம் பசியுடன் இருப்பது உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கவும் குறைக்கவும் செய்யும். இதன் மூலம், பெரும்பாலும் குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை ஏற்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு மயக்கம் ஏற்படலாம்.