fbpx

பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி அந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!! ஏன் தெரியுமா..?

உணவு, உடை, குடிநீர் போல அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக செல்ஃபோன் மாறிவிட்டது. சாதாரணமாக ஒருவரை தொடர்பு கொள்வது முதல் பொழுதுபோக்கு அம்சங்களை பயன்படுத்துவதை தாண்டி, இன்றைக்கு வணிக ரீதியிலான பயன்பாடுகள், அலுவலக தகவல் பரிமாற்றங்கள், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் என சகலத்திற்கும் தேவையானதாக செல்ஃபோன் இருக்கிறது. நாம் செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்போனை கொண்டு செல்லலாம் என்பதால் பல நபர்கள் அதை தங்கள் வசதிக்கு ஏற்ப பயன்படுத்தி வருகின்றனர். படுக்கை வரையிலும் செல்போன் கொண்டு செல்லப்படுகிறது என்பதைத் தாண்டி கழிவறையிலும் பயன்படுத்தப்படுகிறது என்பதே கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது.

உலகெங்கிலும் வாழும் மக்களில் 90% பேர் காலை எழுந்ததுமே செல்ஃபோன் ஸ்கிரீனில் தான் கண் விழிக்கிறார்களாம். பெரும்பாலான நபர்கள் காலைக்கடன் கழிக்க கழிவறையில் அமர்ந்திருக்கும்போது ஸ்டேட்டஸ் மற்றும் ரீல்ஸ் வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கழிவறையில் செல்ஃபோன் பயன்படுத்தினால் எந்த அளவுக்கு நோய் அபாயம் ஏற்படும் என்பது குறித்து பெருமளவுக்கு விழிப்புணர்வு இல்லை.

கைகளை கழுவுவது கிடையாது : உணவு சமைக்கும் முன்பாக, சாப்பிடும் முன்பாக, கழிவறை சென்று வந்த பிறகு, தோட்டத்தில் வேலை செய்த பிறகு என பல நேரங்களில் நாம் கைகளை கழுவினாலும் கூட, அடுத்த நொடி செல்ஃபோனையும் பயன்படுத்துகிறோம். தரைகளில், அழுக்கான இடங்களில் வைக்கப்படும் செல்ஃபோனில் மிகுதியான கிருமிகள் இடம்பெற்றிருக்கும் என்பதை நாம் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

கிருமிகள், பாக்டீரியா மற்றும் வைரஸ் : பல இடங்களை நாம் பயன்படுத்தும் நிலையில் அங்கிருந்து பாக்டீரியா, கிருமி போன்றவை நம் கைகளில் ஒட்டிக் கொள்கின்றன. அவை அப்படியே செல்போனிலும் ஒட்டிக் கொள்கின்றன. நமக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக் கூடிய இ-கோலி, சருமத்தை பாதிக்கும் ஸ்டாஃபிலோகோசஸ், காசநோயை உண்டாக்கக் கூடிய ஆக்டினோபாக்டீரியா, வலி மிகுந்த அளவுக்கு சிறுநீர் தொற்றை உண்டாக்கும் சிட்ரோபேக்டர் போன்ற எண்ணற்ற கிருமிகள் பரவுகின்றன.

மருந்துகளால் குணப்படுத்த முடியாது..? செல்ஃபோனில் ஒட்டிக் கொள்ளும் கிருமிகள் வழக்கமான ஆண்டிபயாடிக் கிருமிகளுக்கு கட்டுப்படாது. சருமம், குடல் நலன், சுவாசக் குழாய் போன்றவற்றை இவை பாதிக்கின்றன. ஃபோனில் உள்ள பிளாஸ்டிக் மீது சில வகை வைரஸ்கள் ஒரு வாரம் வரையிலும் உயிர் வாழுமாம்.

கிருமிகள் பரவ வாய்ப்பு இருக்கக் கூடிய கதவு கைப்பிடிகள், ஏடிஎம் இயந்திரங்கள், லிஃப்ட் பட்டன்களை போலவே செல்ஃபோன்களுக்கும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே, தினசரி ஃபோன்களை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படும் நிலையில், கிருமிகள் நிறைந்த கழிவறை பக்கம் அவற்றை கொண்டு செல்லவேக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

Chella

Next Post

அடையாளத்தை தொலைத்து விடக்கூடாது என்பதற்காக அடைக்கலம் தேடி சென்றுள்ளார் ஓபிஎஸ்….! ஆர்பி உதயகுமார் விளாசல்….!

Tue May 9 , 2023
தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் நேற்று கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது சென்ற காலங்களை மறந்து விட்டு ஒன்றிணைந்து இருக்கின்றோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். அதிமுகவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இருவரும் […]

You May Like