fbpx

மீசோ வாடிக்கையாளர்களா நீங்கள்?… வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் அரங்கேறும் ஆன்லைன் மோசடி!…

மீசோ ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தின் பெயரில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுவருகின்றன. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் அரங்கேற்ற மோசடி கும்பல் திட்டமிட்டுள்ளதாக விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களில் ஒன்றாக மீசோ விளங்கிவருகிறது. இதில், மற்ற நிறுவனங்கள் மற்றும் கடைகளைவிட மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கிறது. இதன்காரணமாக வாடிக்கையாளர்கள் மீசோவில் அதிகளவில் ஆன்லைன் மூலம் ஷாப்பிங் செய்துவருகின்றனர். இந்தநிலையில், தற்போது மீசோ நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி ஆன்லைனில் மோசடி நடைபெற்றுவருகிறது.

அந்தவகையில், சமீபத்தில், மீஷோ ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பதிவு செய்துள்ள வாடிக்கையாளர் முகவரிக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில், ‘மீஷோவின் 6 வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த குலுக்கலில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளீர்கள். பரிசு தொகையை பெற இதனுடன் இணைக்கப்பட்ட கூப்பனில் குறிப்பிட்டப்பட்டிருக்கும் 6 இலக்க உதவி எண்ணிற்கு அழைத்து தெரிவிக்க வேண்டும். எங்களது அதிகாரிகள், கூப்பன் இலக்க எண்ணை உறுதி செய்த பின்னர், உங்களுக்கு பரிசுத்தொகை அல்லது பரிசுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்படும்.

இது நிறுவனத்தின் விளம்பர திட்டம் என்பதால், கொடுக்கப்பட்டுள்ள பரிசுக்கான உதவி எண்ணில் மட்டுமே அழைக்க வேண்டும். நிறுவனத்தின் அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை எண்ணை அழைக்க வேண்டாம். மேலும், பரிசுப்பொருள் என்றால், கூரியர் கட்டணங்கள் வாடிக்கையாளரிடம் முன்னரே வசூலிக்கப்படும். ரொக்கப்பரிசு என்றால் நேரடியாக வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். அரசின் வரி உள்பட அனைத்து கட்டணங்களும் முன்னரே வசூலிக்கப்படும் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த கடிதம் வந்த ஓரிரு நாட்களில், மீஷோவில் இருந்து பேசுவதாக கூறும் நபர், வங்கி கணக்கு எண் விவரங்களை அனுப்புமாறு கேட்கிறார். நீங்கள் அதனை கூறும்பட்சத்தில், அதற்கு அடுத்த நாளில், குறிப்பிட்ட எண்ணில் இருந்து ரூ.9.5 லட்சம் பரிசுத்தொகை வென்றுள்ளதாக குறுஞ்செய்தி வருகிறது. மேலும், வங்கிக்கணக்கில் ரூ. 9.5 லட்சம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இதற்கான டி.டி.எஸ் பிடித்தமாக ரூ.13,500 கட்ட வேண்டுமென்பதால், நிறுத்தி வைத்துள்ளதாக மீஷோ நிறுவனத்தை சேர்ந்தவர் என ஒருவர் கூறுகிறார். தொடர்ந்து, டி.டி.எஸ் தொகையை கூகுள்பே மூலம் செலுத்தி, ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினால், பரிசுத்தொகை வரவு வைக்கப்படுமென கூறுகிறார்.

பல்வேறு வடமாநிலங்களில் நடைபெற்று வந்த மோசடி ,தற்போது தமிழகத்தில் அரங்கேற துவங்கியுள்ளது. ஓ.டி.பி எண் கேட்பது, குறுஞ்செய்தி இணைப்பை தொட்டால் தகவல்களை திருடி வங்கி கணக்கில் பணத்தை திருடுவது போன்ற வரிசையில், வீடுகளுக்கே கடிதம் மூலம் மோசடி பேர்வழிகள் வலை விரிக்கிறார்கள். எனவே இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் விழிப்புடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Kokila

Next Post

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான ‘ப்ளூ டிக்’!... கட்டண விவரத்தை வெளியிட்டது மெட்டா!

Thu Mar 30 , 2023
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிற்கான மெட்டாவின் உறுதிப்படுத்தப்பட்ட புளூ டிக் திட்டத்திற்கான சந்தா கட்டணமாக மாதம் ரூ.1,450 செலுத்தவேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை தொடர்ந்து பயனர்களுக்கு ‘ப்ளூ டிக்’ கட்டண சந்தாவை மெட்டா நிறுவனமும் அறிமுகம் செய்தது. ஊடக நிறுவனங்கள், சமூக வலைதள இன்ப்ளுயன்ஸர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் போன்ற பயனர் கணக்குகளுக்கு மட்டுமே ப்ளூ டிக் வழங்கி வந்தது. இதையடுத்து இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் கணக்குகளுக்கு ‘ப்ளூ […]

You May Like