fbpx

வாடகை வீட்டில் வசிக்கும் நபர்களா நீங்கள்…? இனி கவலை வேண்டாம்… நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!

வீட்டின் உரிமையாளருடன் வாடகை சம்பந்தமாக ஏற்பட்ட உரிமையில் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காமல் காவல் ஆய்வாளர் கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறி மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த வெங்கட்ராமன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கு தொடர்ந்தார்.

காவல் ஆய்வாளர் தனது புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் கட்டப்பஞ்சாயத்து செய்தார். வாடகைப்பாக்கியை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுமாறு என்னை மிரட்டினார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சுப்பிரமணியன் புகாரின் பேரில் என்னைத் தொந்தரவு செய்யக்கூடாது என எஸ்.எஸ்.காலனி காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.இளங்கோவன், மனுதாரர் வாடகை பாக்கியைச் செலுத்திவிட்டு வீட்டை காலி செய்ய மனுதாரர் தயாராக இருக்கும் போது, மனுதாரருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையிலான பிரச்சினையில் காவல் ஆய்வாளர் தலையிட்டது தவறானது. உரிமையில் பிரச்சினையில் போலீசார் தலையிடக்கூடாது என நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்ட போதிலும், காவல் ஆய்வாளர் தலையிட்டுள்ளார். அவர் மீது மதுரை துணை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Vignesh

Next Post

நாளையும் (டிச.17) ரேஷன் கடைகள் இயங்கும்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

Sat Dec 16 , 2023
மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக வரும் 17ஆம் தேதி சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பில் 4 மாவட்டங்களில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.6,000 நிவாரண உதவி வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான டோக்கன் […]

You May Like