fbpx

ரேஷன் கடைகளில் அரிசி வாங்குபவரா நீங்கள்..? நாளை முதல் புதிய மாற்றம்..!! மீறினால் அபராதம்..!!

ஜனவரி 1ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல ஒரு ரேஷன் அட்டைதாரருக்கு 20 கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப்படும் பொழுது அதில், 15 கிலோ அரிசி மத்திய அரசாலும் மீதமுள்ள 5 கிலோ அரிசி மாநில அரசாலும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்படும் அரிசிக்கு ஒரே ரசீது கொடுக்கப்பட்டு வருவதால் மக்களுக்கு மத்திய, மாநில அரசு வழங்கும் பொருளானது சரியாக சென்றடைகிறதா? என்பதில் குழப்பம் எழுந்துள்ளது.

ரேஷன் கடைகளில் அரிசி வாங்குபவரா நீங்கள்..? நாளை முதல் புதிய மாற்றம்..!! மீறினால் அபராதம்..!!

இதனால், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனி ரசீது வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், வரும் 1ஆம் தேதிக்கு மேல் ரேஷன் கடையில் அரிசி வாங்கும் நபர்கள் கட்டாயம் மத்திய, மாநில அரசு வழங்கும் அரிசிக்கு தனித்தனியே ரசீது கொடுக்காவிட்டாலும் கேட்டு வாங்கி கொள்ளுமாறு தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு இந்த விதிமுறையை கடைபிடிக்காமல் பழைய முறையில் விநியோகம் செய்து வந்தால் சம்பந்தப்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு அபராதம் வசூலிக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.

Chella

Next Post

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் பத்து தல ரிலீஸ் தேதி அறிவிப்பு!...

Sat Dec 31 , 2022
நடிகர் சிலம்பரசன் நடித்துள்ள  பத்து தல திரைப்படம் வரும் 2023 மார்ச் 30ம் தேதி வெளியாகவுள்ளதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தை நெடுஞ்சாலை, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் நடிகை பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், கௌதம் வாசுதேவ் மேனன், டீஜே, ஜோ […]

You May Like