கொரோனா தொற்று காலங்களில் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான பகுதிகளில், மக்களின் நலன் கருதி வீட்டில் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பல கார்ப்பரேட் அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் தொற்று அதிகரிக்காமல் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தற்போது படிப்படியாக வீட்டில் இருந்து வேலை செய்வது ஒரு கலாச்சாரம் போல நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், இப்படி வீட்டில் இருந்து வேலை செய்வது எளிதாக இருந்தாலும், இளைஞர்களிடையே எடை அதிகரிப்பதற்கு இது மிகப்பெரிய காரணம் என்றே சொல்லலாம்.
வீட்டில் இருந்து வேலை செய்வது மக்களின் உடல் செயல்பாடுகளை கணிசமாகக் குறைக்கிறது. இதனால் வயிறு மற்றும் இடுப்பில் கொழுப்பு அதிகரித்தால், அது போகவே போகாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீட்டில் இருந்து வேலை செய்தாலும், எடையைக் குறைக்க சில குறிப்புகளை உங்களுக்கு இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது.
அவ்வப்போது நடக்கவும்: நீங்கள் ஒரே இடத்தில் தொடர்ந்து 8 முதல் 10 மணி நேரம் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தால், உங்கள் வயிற்றில் சுற்றி தொப்பை இருக்கும். நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்வதால் கொழுப்பு அதிகரிக்கும். எனவே, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடங்கள் இடைவெளி எடுத்து, கொஞ்சம் நடக்க பழகுங்கள். இதைச் செய்தால் உங்கள் எடை கண்டிப்பாக கட்டுக்குள் இருக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவு: வீட்டில் இருந்து வேலை செய்யும்போது எடை அதிகரிக்கும். எனவே, அதை பற்றி நீங்கள் மிகவும் கவலைப்படுகிறீர்கள் என்றால், உங்கள் தினசரி உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணவுகளை சாப்பிட்டால் உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். இது அதிக உணவை சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் காரணமாக, உங்கள் எடை படிப்படியாகக் குறையத் தொடங்குவதை நீங்கள் காணலாம்.
தண்ணீர் குடிக்கவும்: வீட்டில் இருந்து ஒரே இடத்தில் வேலை செய்யும் போது அதிகம் சாப்பிடுவது வழக்கம். இதனால், உண்டாகும் எடை அதிகரிப்பை தவிர்க்க முடியாதது. எனவே, இதைத் தவிர்க்க, வேலை செய்யும் போது முடிந்தவரை அவ்வப்போது தண்ணீர் குடியுங்கள். அது பசியைக் குறைப்பது மட்டுமின்றி, எடையைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே, ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடியுங்கள். குறிப்பாக காலையில் வெதுவெதுப்பான நீரைக் குடியுங்கள். இது தொப்பை மற்றும் இடுப்பை சுற்றி இருக்கும் கொழுப்பைக் குறைக்கும்.
Read More : உங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கா..? அப்படினா கண்டிப்பா இதை சாப்பிடாதீங்க..!!