மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.
மயிலாடுதுறை மாவட்டம் ஊரக வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி (சைக்கிள்) ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.01.2023- இன் படி பொதுப்பிரிவினர் 34 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியின பிரிவினர் / ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/ வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, பற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அஞ்சலில் விண்ணப்ப படிவத்தினை அனுப்பவேண்டும். சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1(104) inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 12.05.2023 மாலை 5.45 மணிக்குள் அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.