fbpx

வருமான வரி செலுத்துபவரா நீங்கள்..? உங்களுக்கு வெளியாகி இருக்கும் முக்கிய அறிவிப்புகளை பாருங்க..!!

வரி செலுத்துவோருக்கு நிவாரணம் அளிக்கும் அடிப்படையில் புது வரி விதிப்பில் 2 புதிய சலுகைகளை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. முன்னதாக புது வரி விதிப்பில் மக்கள் பெரியளவில் விலக்கு பலனை பெறவில்லை. எனினும் இனி புது வரி விதிப்பு முறையிலும் கூட, சம்பளம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்கள் ரூ.50 ஆயிரத்துக்கான ஸ்டாண்டர் ட்டிடக்ஷன் பலனை பெறுவர்.

அதோடு ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை வரி விலக்கு மற்றும் ரூ.50 ஆயிரம் ஸ்டாண்டார்ட் டிடக்ஷன் உள்ளிட்டவற்றுடன், ஆண்டு வருமானம் ரூ.7.5 லட்சத்திற்குள் பெறும் மக்கள் எவ்வித வரியும் செலுத்த வேண்டியதில்லை. இந்த புது அறிவிப்புகள் வாயிலாக மக்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். அதுமட்டுமின்றி வருமான வரித்துறை, வரி செலுத்துபவருக்கு வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) எனும் புது அறிக்கையை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

இவை வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யக்கூடிய செயல்முறையை சுலபமாக்கும். AIS என்பது நீங்கள் மேற்கொண்ட நிதி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையாகும் மற்றும் பல நிறுவனங்களால், பெரும்பாலும் நிதி நிறுவனங்களால் வரித் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறையின் மேலும் நினைவூட்டல்களை தடுப்பதற்கு வரி செலுத்துவோர் புது வருடாந்திர தகவலறிக்கையை பயன்படுத்தி அதை சமர்ப்பிக்கும் முன் வருமான வரிக் கணக்கை சரிபார்க்கலாம்.

Chella

Next Post

40 வயதிலும் கவர்ச்சியை காட்ட முன்வந்த ஆண்ட்டி நடிகை..!! சமந்தாவை விட சம்பளம் ஓவர்..!! வாயடைத்துப் போன தயாரிப்பு நிறுவனம்..!!

Fri Apr 28 , 2023
ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்த நடிகைகள் மார்க்கெட் இழந்ததும் டாப் நடிகர்களின் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடுவார்கள். ஆனால், இப்போதுள்ள ட்ரெண்டே வேறு மாதிரி மாறி உள்ளது. ஏனென்றால், இப்போதும் சமந்தாவுக்கு மார்க்கெட் உச்சத்தில் தான் உள்ளது. இப்படி இருக்கும் சூழலில் புஷ்பா படத்தில் ‘ஓ சொல்றியா மாமா’ பாடலுக்கு சமந்தா கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார். இந்தப் பாட்டின் மூலம் சமந்தாவின் மார்க்கெட் இன்னும் உயர்ந்தது. அதுமட்டும் இன்றி இந்தப் […]
40 வயதிலும் கவர்ச்சியை காட்ட முன்வந்த ஆண்ட்டி நடிகை..!! சமந்தாவை விட சம்பளம் ஓவர்..!! வாயடைத்துப் போன தயாரிப்பு நிறுவனம்..!!

You May Like