fbpx

இந்தியன் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?… ரூ.2 கோடி வரை முதலீடு செய்யலாம்!… புதிய வைப்பு நிதி திட்டங்கள் அறிவிப்பு!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பத்தாயிரம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 400 நாட்கள் அமலில் இருக்கும் எனவும் இதன் மூலமாக பொது வாடிக்கையாளர்களுக்கு 7.25 சதவீதம் வட்டியும், சீனியர் சிட்டிசனுக்கு 7.75 சதவீதம் வட்டியும், சூப்பர் சீனியர் சிட்டிசனுக்கு எட்டு சதவீத வட்டியும் வழங்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் IND SUPER 300 DAYS திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியன் வங்கி அறிமுகம் படுத்தியது. இது 300 நாட்களுக்கு உரியது. குறைந்த பட்சமாக 5 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 2 கோடி வரை முதலீடு செய்ய முடியும். இந்த திட்டம் வருகின்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் இதில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05 சதவீதமும், சீனியர் சிட்டிசனுக்கு 7. 55 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.80 சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!... இனிமேல் இந்த ரூல்ஸ் ஃபாலோ பண்ணுங்க!... தேசிய நெடுஞ்சாலைத்துறை!

Wed Jul 5 , 2023
சாலைகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால் அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என்று அர்த்தம் எனவும் இந்த புதிய விதியை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு […]

You May Like