fbpx

ஐடி படித்தவர்களா நீங்கள்?… சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் வேலை!… முழு விவரம் இதோ!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பதவிக்கலாம் 6 மாதம் மட்டுமே. விண்ணப்பத்தை பதிவு செய்து 19.06.2023க்குள் பல்கலை கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் : சாஃப்டவேர் அனலிஸிட் -5, புரோகிராம் அனலிஸ்ட் -5. கல்வித்தகுதி :
சாஃப்டவேர் அனலிஸிட் – BE / BTech அல்லது MCA/ MTech (கணினி பிரிவு) மற்றும் குறிப்பிட்ட துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். புரோகிராம் அனலிஸ்ட் – BE / BTech மற்றும் குறிப்பிட்ட கண்ணி தொழில்நுட்பம் தெரிந்து இருக்க வேண்டும் (Oracle, MySQL, Data Base Administration, Java Programming), சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) : சாஃப்டவேர் அனலிஸிட் – ரூ.30,000/-, புரோகிராம் அனலிஸ்ட் – ரூ.25,000/ ஆகும்.

தேர்வு செய்யப்படும் முறை : விண்ணப்பங்கள் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணல் வாயிலாக பணியமர்த்தப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி – 19 ஜூன் 2023 (மாலை 5 மணிக்குள் தபால் வந்து சேர வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிகாரபூர்வ தளமான auegov.ac.in க்கு செல்ல வேண்டும். அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் வெளியிப்படட்ட உரிய வேலைவாய்ப்பு லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அதில் விண்ணப்பத்தை பத்திரவிறக்கம் செய்து அதனை நிரப்பி, அதில் தேவைப்படும் ஆவணங்களை இணைத்து இந்த முகவரிக்கு Application for Temporary Post என எழுதி அனுப்ப வேண்டும். The Director, Centre for e-Governance, Centre for Excellence Building, Anna University, Chennai – 600 025 ஆகும்.

Kokila

Next Post

சுட்டெரிக்கும் வெயில்!... கடந்த 3 நாட்களில் இந்த மாவட்டங்களில் 98 பேர் உயிரிழப்பு!

Mon Jun 19 , 2023
கடந்த 3 நாட்களில் உ.பி.யில் 54 பேரும், பீகாரில் 44 பேரும் வெயில் தாக்கம் காரணமாக பலியாகியுள்ளனர். கோடை காலம் முடிய உள்ள நிலையிலும் பல இடங்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக வட இந்தியாவில் பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலத்தில் இந்த வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே உள்ளது. இந்த வெயிலினால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அந்த வகையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பல்லியா மாவட்டத்தில் கடந்த […]

You May Like