பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, ஆன்லைன் பரிவர்த்தனை வேகமாக வளர்ந்து வருகிறது. நேரடியாக பணத்தைக் கையாளுவதைத் தவிர்த்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.
டிஜிட்டல் பேமெண்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருகிறது யுபிஐ செயலிகள். இந்தியாவில் தற்போது நடைபெறவுள்ள ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ சேவையை பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது.
இதனால் அதனை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதிக்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக தொகை பரிமாறப்படுவதை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இனி கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் பணம் அனுப்புவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தெரிகிறது.