நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்களுக்கு (பிசிசி) விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது..
பாஸ்போர்ட் தொடர்பாக காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெறும் வசதி எளிமையாக்கப்பட்டுள்ளது.. மத்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ செப்டம்பர் 28 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்களுக்கு (பிசிசி) விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
காவல்துறையின் ஆட்சேபனையில்லா சான்றிதழ்களின் தேவை அதிகரித்துள்ளதாகவும், அதனை எளிமையாக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளைப் பெறும்போது மக்களின் வேலைகளை இந்த சேவை எளிதாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது காவல்துறையின் ஆட்சேபனை இல்லா சான்றிதழகள் இன்றியமையாத தேவையாகும்.. இந்த சான்றிகளுக்கு ஆன்லைன் தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் இனி விண்ணப்பிக்க முடியும்.. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, வெளிநாட்டில் வேலை தேடும் இந்திய குடிமக்களுக்கு உதவுவதோடு, கல்வி, நீண்ட கால விசாக்கள் மற்றும் குடியேற்றம் போன்ற பிற பிசிசி தேவைகளுக்கான தேவைகளையும் பூர்த்தி செய்யும்.