fbpx

கார் வாங்கப்போறிங்களா?… இதுதான் சரியான நேரம்!… ஆஃபர்களை வாரி வழங்கிய ரெனால்ட் நிறுவனம்!

ரெனால்ட் இந்தியா தங்களது குறிப்பிட்ட கார்களுக்கு மே மாதத்திற்கான அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.

கார் உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது கார்களில் புதிய அப்டேட்களுடன் கூடிய மாடல்களை கார் விற்பனை சந்தையில் இறக்குவதுண்டு. அதேபோல் கைவசம் உள்ள பழைய மாடல் கார்களுக்கான விற்பனையில் குறிப்பிட்ட சலுகைகளை அறிவிப்பதும் வாடிக்கையான ஒன்று ரெனால்ட் கார் நிருவனம் இந்தியாவில் தங்களது கார் விற்பனையில் நல்ல முன்னேற்றம் அடைந்துவரும் நிலையில் அந்நிறுவனம் புதுப்புது மாடல்களில் கார்களை இந்தியாவில் களமிறக்கி வருகிறது. அதன்படி குறைந்த விலை பட்ஜெட் கார் முதல் அதிக இடவசதியுள்ள கார் வரை அனைத்து விதங்களிலும் பல்வேறு ரக கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் ரெனால்ட் நிறுவனம் தங்களது குறிப்பிட்ட ரக தேர்ந்தெடுக்கப்பட்ட கார்களுக்கு மே மாத சலுகையாக அதிகபட்சமாக ரூ.62,000 வரை அறிவித்துள்ளது. அதன்படி ரெனால்ட் ட்ரைபர், ரெனால்ட் கிகர், மற்றும் ரெனால்ட் க்விட் கார்களுக்கான தள்ளுபடியை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மாடல்கள் மற்றும் டீலர்ஷிப் ஸ்டோர்களைப் பொறுத்து இந்த சலுகை மாறுபடும் எனவும் தெரிவித்துள்ளது.

ரெனால்ட் ட்ரைபர்(Triber): ஏழு இருக்கைகள் கொண்ட (MUV) அதிகபட்சமாக 62,000 ரூபாய் வரை சலுகை பெறலாம். இந்தச் சலுகை ரூ.25,000 ரொக்கத் தள்ளுபடியாகவும், ₹25,000 எக்ஸ்சேஞ்ச் போனஸாகவும், ரூ.12,000 கார்ப்பரேட் ஊழியர்களுக்கான தள்ளுபடியாகவும் கிடைக்கிறது. கூடுதலாக, ரெனால்ட் ட்ரைபரின் 2022 மாடலில் வாங்குபவர்கள் ரூ.10,000 மதிப்புள்ள கூடுதல் பலன்களைப் பெறலாம். மேலும் ஸ்கிராப்பேஜ்(scrappage) திட்டத்தின் (பழைய வாகனங்களை ஸ்கிராப்பிற்கு அனுப்பும்) கீழ் ரூ.10,000 கூடுதல் தள்ளுபடியாகவும் கிடைக்கிறது.

Kokila

Next Post

#Results: நாளை வெளியாகிறது 10, 11 வகுப்பு தேர்வு முடிவுகள்...! எந்த இணையத்தில் சென்று பார்ப்பது...?

Thu May 18 , 2023
10,11- ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும். 2022-2023-ம் ஆண்டில்‌ 10 மற்றும்‌ 11-ம்‌ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்‌ நாளை பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்விவளாகத்தில்‌ அமைந்துள்ள புரட்சித்தலைவர்‌ எம்‌.ஜி.ஆர்‌ நூற்றாண்டு விழா கட்டடத்தின்‌ முதல்‌ தளத்தில்‌ வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரி மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

You May Like