fbpx

சொகுசு வீடு வாங்கப்போறீங்களா..? சிக்கலில் மாட்டிக்காதீங்க..!! இந்த வசதியெல்லாம் இருக்கான்னு பாருங்க..!!

நாட்டில் விலைவாசி உயர்ந்த போதிலும், சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், புனே, கொல்கத்தா என இந்தியா முழுவதுமே சொகுசு வீட்டுத் தேவை அதிகரித்து வருகிறது. ஐடி, கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிக ஊதியம் பெறும் முதல் தலைமுறை பணக்கார மற்றும் நடுத்தர வர்க்கத்தினர், குடியிருக்க விரும்பும் இடம் முக்கியமான நகரின் முக்கிய பகுதிகளில இருக்க வேண்டும். மால், ரயில் நிலையம், விமான நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகள் பேருந்து நிலையம் என எல்லாமே அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

உதாரணமாக நீச்சல் குளம், ஜிம், காவலாளி, பூங்கா, 24 மணி நேரமும் ஜெனரேட்டர் வசதி, கிளப், மிக அழகான ஸ்டைலிஷான வீட்டு கட்டமைப்புகள், கார் பார்க்கிங், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட மிகச்சிறந்தத உள் கட்டமைப்புகள், முற்றிலும் அதிக வசதி உடைய மக்கள் மட்டுமே வாங்க கூடிய அளவிற்கான நிலத்தின் மதிப்பு (ரிவேல்யூ அதிகமாக இருக்க வேண்டும்) அப்படியான விஷயங்களை மக்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் சொகுசு வீடுவாங்க விரும்பும் மக்கள், வாங்க போகும் இடம், வீட்டை கட்டி தரும் டெவலப்பரின் சாதனைகள் மற்றும் அவர்களின் வருமானம் மற்றும் சரியான முறையில் குறித்த நேரத்தில் சொல்லும் எல்லாவற்றையும் செய்து தருகிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும். எனவே, சொகு வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சரியான இடம் : நீங்கள் ஆடம்பரமான சொகுசு வீட்டை வாங்க முடிவு செய்துவிட்டால், முதலீடு செய்யும் பணம் நியாயமானதாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் முதலீடு செய்யும் இடம் மிக முக்கியமானதாக பகுதியாக இருக்க வேண்டும். அதாவது மிகவும் மதிப்பு மிக்க இடமாக இருக்க வேண்டும். அதாவது மக்கள் நீ நான் என்று போட்டி போடக்கூடிய அளவிற்கு முக்கியமான இடமாக இருக்க வேண்டும். ஊருக்கு வெளியில் காட்டுக்குள் அல்லது தண்ணீர் தேங்கும் இடமாக இருக்கக்கூடாது. சொத்தின் மதிப்பு பின்னாளில் அதிகரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மால், ரயில் நிலையம், விமான நிலையம், பள்ளிகள், மருத்துவமனைகள், பேருந்து நிலையம் என எல்லாமே அருகில் இருக்க வேண்டும்.

சொகுசு வசதிகள் : அடுத்ததாக நீங்கள் வாங்கும் வீட்டில் சொன்னபடி வசதிகளை செய்து கொடுக்கிறார்களா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஸ்பா, நீச்சல் குளம், தனித்தனி கார் பார்க்கிங். விளையாட்டு வசதிகள், பூங்கா, உயர் ரக கட்டுமானங்கள், வீட்டில் ஏசி, கதவு, ஜன்னல் என எல்லாவற்றிலும் ஆடம்பர வசதிகள் என விஐபிக்கான அனைத்து வசதிகளும் செய்து தருவது குறித்து எழுத்துப்பூர்வ ஆவணமும், பின்னால் அதனை செய்து தரும் நிறுவனமாகவும் இருக்க வேண்டும். இந்த வசதிகளுக்காகவே நீங்கள் சொகுசு வீடுகள் வாங்குகிறீர்கள். எனவே இந்த வசதிகளை கண்டிப்பாக பார்த்து பார்த்து வாங்க வேண்டும்.

ரியல் எஸ்டேட் நிறுவனம் : நீங்கள் பணத்தை செலுத்த போகும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மிகவும் புகழ் பெற்றதாகவும், நம்பகாமானதாக இருக்க வேண்டும். வீடு கட்டிக்கொடுப்பதில் நீண்ட அனுபவம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் வீட்டை கட்டிக்கொடுப்பவர்களாக இருக்க வேண்டும். அந்த டெவலப்பருக்கு அதாவது கட்டுமான நிறுவனத்திற்கு சமூகத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும். ஏனெனில் சில கட்டுமான நிறுவனங்கள் அதை செய்கிறோம். இதை செய்து தருகிறோம் என கவர்ச்சி வாக்குறுதிகளை வீசி நம்ப வைத்து ஏமாற்றுகின்றன.

ஒழுங்குமுறை : அதாவது இன்னும் தெளிவாக சொல்வது என்றால், 8 மாடிக்கு அனுமதி வாங்கிவிட்டு 10 மாடி கட்டுவது. கார் பார்க்கிங் வசதிகள் சொன்னபடி செய்யாமல் மாற்றி அமைப்பது. அனுமதி வாங்காமல் கட்டிவிட்டு பின்னர் அனுமதிக்காக அழைவது போன்றவை இருக்கவே கூடாது. முக்கியமாக நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களைத் தாங்கும் வகையில் அனுமதிச் சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும்.

பத்திர ஆவணங்கள் மற்றும் அனுமதி : அடுத்ததாக ஆடம்பரமான கவர்ச்சியான வீடுகள் வாங்கும் போது கோடிகளை செலவு செய்ய வேண்டியதிருக்கும். அப்படியான நிலையில், வீட்டின் பத்திரத்தில் எந்த வில்லங்கமும் வரக்கூடாது. வீடு அல்லது நிலம் பிரச்சனை இல்லாத சரியான இடமாக இருக்க வேண்டும். அதேபோல், தண்ணீர் தேங்காத இடமாக இருக்க வேண்டும். சொகுசு வசதிகளுடன் அடுக்குமாடி கட்டுகிறார்கள் என்றால், அதற்காக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (RERA) கீழ், அத்தியாவசியமான விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், அவர்கள் பதிவு செய்திருக்கிறர்களா? என்பதை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

கவர்ச்சி வாக்குறுதி : சொகுசு வீடுகளை வாங்க விரும்பும் மக்கள் மேற்கண்ட விஷயங்களில் மிக கவனமாக இருக்க வேண்டும். நண்பர் சொல்கிறார் என்று ஆசைப்பட்டோ அல்லது கவர்ச்சி வாக்குறுதிகளை நம்பியோ போகவே கூடாது. குறைவான விலையில் ஏராளமான வசதிகள் என்ற வாசகத்தை நம்பக்கூடாது. சரியான இடம், தரமான கட்டிடம், மிகச்சிறப்பான ஆடம்பர வசதிகள், நிலையான உத்தரவாதம், நம்பிக்கையான நிறுவனம் இருந்தால் மட்டுமே சொகுசு வீடு உங்கள் கனவு இல்லமாக இருக்கும்.

Chella

Next Post

தமிழ்நாடு அரசின் ஔவையார் விருது..!! டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்..!! வெளியான அறிவிப்பு..!!

Sat Dec 2 , 2023
தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு சிறந்த சேவை புரிந்த பெண்கள் வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை புரிந்த பெண்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஔவையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனுடன் சுயவிவரம் மற்றும் இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், தேசிய மற்றும் உலகளாவிய விருதுகளின் விவரம் […]

You May Like