fbpx

எலக்ட்ரிக் கார்கள் வாங்கப்போறீங்களா..? குறைவான விலையில் டாப் 5 கார்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!!

இந்தியாவில் தற்போது மின்சார கார்கள் மிகவும் பிரபலமாகி வருகின்றன. ஏனெனில் அவற்றை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு. மேலும், சுற்றுச்சூழலின் அடிப்படையில் இந்த வாகனங்கள் மிகவும் பாதுகாப்பானவை. உங்களுக்கும் மின்சார கார் வாங்கும் எண்ணம் இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியாவில் உள்ள 5 மலிவான எலக்ட்ரிக் கார்களைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

டாடா டியாகோ இவி

இந்த கார் 19.2kWh மற்றும் 24kWh ஆகிய 2 பேட்டரி பேக் வகைகளைக் கொண்டுள்ளது. இரண்டு பேட்டரி பேக்குகளும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன. இது சிறிய பேட்டரியுடன் 61PS/110Nm மற்றும் பெரிய பேட்டரியுடன் 75PS/114Nm அவுட்புட்டை உருவாக்குகிறது. இவற்றில் முறையே 250 கிலோ மீட்டர் முதல் 315 கிலோ மீட்டர் வரையிலான ரேஞ்ச் கிடைக்கிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.8.69 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

சிட்ரோயன் இசி3

சிட்ரோயனின் ஆல்-எலக்ட்ரிக் கார் eC3, 29.2kWh பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. இது 57 PS பவரையும் 143 Nm டார்க் அவுட்புட் உற்பத்தி செய்யும் மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. இது ARAI சான்றளிக்கப்பட்ட ஒரு சார்ஜில் 320 கிமீ வரம்பைப் பெறுகிறது. eC3ஐ 15A பிளக் பாயிண்ட் சார்ஜர் மூலம் 10.30 மணி நேரம் சார்ஜ் செய்ய முடியும். அதே சமயம் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் 57 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.11.50 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

டாடா டிகோர் இவி

டாடா டிகோர் இவி, Ziptron EV தொழில்நுட்பத்துடன் கூடிய 26kWh பேட்டரி பேக்கைப் பெறுகிறது. இதில் உள்ள எலக்ட்ரிக் மோட்டார் 75 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த மின்சார செடான் ARAI சான்றளிக்கப்பட்ட 315 கிமீ வரம்பைப் பெறுகிறது. வால் சார்ஜரைப் பயன்படுத்தி 8.5 மணி நேரத்தில் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம். மேலும், 25kW DC ஃபாஸ்ட் சார்ஜரைப் பயன்படுத்தி 60 நிமிடங்களில் சார்ஜ் செய்யலாம். இதன் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.12.49 லட்சமாகும்.

டாடா நெக்ஸான் இவி

இந்த காரின் விலை ரூ.14.99 லட்சத்தில் தொடங்குகிறது. 30.2 kWh பேட்டரி பேக் இதில் கிடைக்கிறது. இதை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 312 கிமீ தூரம் செல்லும். இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 120 கிலோமீட்டர் . ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன் இதை வெறும் 60 நிமிடங்களில் 0 -விலிருந்து 80% வரை சார்ஜ் செய்யலாம். இந்த காரில் 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், தானியங்கி காலநிலை கட்டுப்பாடு மற்றும் சன்ரூஃப் போன்ற அம்சங்களும் உள்ளன.

MG ZS EV

MG ZS EV காரின் விலை சுமார் ரூ. 22.5 லட்சம் ஆகும். இந்தியாவில் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 419 கிமீ வரை செல்லும். மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங்கைப் பயன்படுத்தி 50 நிமிடங்களில் 0 முதல் 80% வரை இதை சார்ஜ் செய்ய முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகும். இது 44.5 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. பனோரமிக் சன்ரூஃப், 10.1 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் போன்ற அம்சங்கள் இந்த காரில் உள்ளன.

Chella

Next Post

கல்லூரி வகுப்பறையில் உயிரிழந்து கிடந்த 19 வயது மாணவி…….! அருகே கிடந்த 6 மாத கரு ஆந்திராவில் பரபரப்பு…….!

Sun Apr 16 , 2023
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவர் பி டெக் 2ம் ஆண்டு படித்து வந்தார். இத்தகையினில் கடந்த 11ஆம் தேதி அந்த மாணவி அதே கல்லூரி வகுப்பறையில் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். வகுப்பறையில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து வகுப்பறையின் கதவுகளை சாத்திக்கொண்டு அந்த மாணவி உள்ளே இருந்துள்ளார். வெகு நேரம் ஆன பின்னரும் கதவை திறக்காததால் மற்ற மாணவிகள் […]

You May Like