கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கம்பியால் தாக்கிவிட்டு, கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் என்ற அனிகுட்டன் (48). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு 40 வயதில் தன்னியா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், மனைவி தன்னியா மளிகை கடை நடத்தி வரும் நிலையில், அங்கு பாஜக கிளை செயலாளர் மது குமார் (52) என்பவர் தன்னியாவுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.
இதை கணவர் அனிகுட்டன் நேரில் பார்த்துவிட்டார். இதனால், அனிகுட்டன்- தன்னியா தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த மதுகுமார், ஆத்திரத்தில் அனிகுட்டனை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். அப்போது, மனைவி தன்னியா, தனது கணவரை கம்பால் அடித்துள்ளார். பின்னர், இதுகுறித்து அனிகுட்டன் காவல்நிலையத்தில் புகார் புகாரளித்தார்.
அதன்பேரில் மதுகுமார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான், கைதான மதுகுமார் ஜாமீனில் வெளியே வந்ததும், மதுகுமாருக்கும், தன்னியாவுக்கும் இடையே மீண்டும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அறிந்த அனிகுட்டன் மீண்டும் மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அவர் கேட்கவில்லை. இதனால், மனைவியை கொலை செய்ய அனிகுட்டன் முடிவு செய்துள்ளார்.
அதன்படி, நேற்று காலை மளிகை கடையை திறக்க சென்ற தன்னியாவை அனிகுட்டன் பின்தொடர்ந்து சென்று கடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அனிகுட்டன் கம்பியால் தனது மனைவி மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதில், அவர் நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக எண்ணிய கணவர் அணிகுட்டன், வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அனிகுட்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மளிகை கடையில் படுகாயமடைந்து கிடந்த உயிருக்கு போராடிய தன்னியாவை மீட்ட மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Read More : குழப்பம் தீர்ந்தது..!! கிராம நத்தம் நிலங்களுக்கு புதிய சர்வே எண்..!! மாஸ் காட்டிய வருவாய்த்துறை..!!