fbpx

புதிய தொழில் தொடங்க போறீங்களா..? அரசு வழங்கும் நிதியுதவிக்கு நீங்களும் விண்ணப்பிக்கலாம்..!! ஆட்சியர் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அரசு சார்பில் சுயதொழில் தொடங்குவோருக்கு பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொழில் முனைவோருக்கு உதவும் வகையில் புதிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

அதாவது, நடப்பாண்டில் சுய தொழில் தொடங்குவதற்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசு நீட்ஸ் திட்டத்தின் கீழ் 36 தொழில் திட்டங்களுக்கு 3 கோடியே 55 லட்சம் தொகையை மானியமாக வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 லட்சம் ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரை திட்ட மதிப்பீட்டில் தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பதாரர்கள் அரசு இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அதேசமயம் தமிழக அரசு சார்பில் நிலம், கட்டிடம் மற்றும் எந்திரம் போன்ற திட்ட மதிப்பீட்டில் 25% மானியம் அதாவது அதிகபட்சம் 75 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். 12ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பட்டப் படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ, தொழில்சார் பயிற்சி போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்“ என தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

பூமியை நெருங்கி வரும் சிறுகோள்..!! இதுவரை இல்லாத பேரிழப்பு..!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..!!

Sat Nov 11 , 2023
பூமிக்கு நெருக்கமாக வர இருக்கும் சிறுகோள் குறித்து நாசா ஆய்வு செய்துள்ளது. நாசாவின் OSIRIS-REX விஞ்ஞானிகள் குழுவின் கூற்றுப்படி, 1999இல் முதன்முதலில் பூமியை நோக்கி வரும் அந்த சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. பென்னு என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறுகோள், நமது கிரகத்தின் சுற்றுப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. அதன் செயல்பாடுகளை வைத்து ஆராய்ந்துள்ள விஞ்ஞானிகள், செப்டம்பர் 24, 2182-ல் அது பூமியைத் தாக்கக்கூடும் அல்லது நெருக்கமாக கடந்து செல்லும் என்று கணித்துள்ளனர். இந்த […]

You May Like