fbpx

உங்கள் சேமிப்பு கணக்கில் ரூ.10000க்கும் மேல் பணம் எடுக்கபோறீங்களா? விதிமுறைகளை தெரிஞ்சுக்கங்க…

அஞ்சலக சேமிப்பு கணக்கில் ரூ.10,000க்கும் மேல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிமுறையை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அமைச்சகம் சுற்றறிக்கையை வெளியிட்டள்ளது. அதில் இந்த புதிய விதிமுறைகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு கணக்கில் நீங்கள் ரூ.10000 எடுக்க வேண்டும் என்றார் அவர்களது கணக்கு சரிபார்க்கப்படும். ஆதார் அட்டை போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் காட்ட வேண்டும். இதுமோசடிகளைத் தடுக்க இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றொரு முக்கியமான தகவல் , அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் கட்டாயம் இந்த விதிமுறை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்டில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கும் வரம்பு தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. வந்திருக்கும் புதிய மாற்றத்தின்படி, இப்போது கணக்கு வைத்திருப்பவர்கள் கிராமின் டக் சேவா கிளையில் ஒரு நாளில் ரூ 20,000 வரை எடுக்கலாம். இதற்கு முன்பு பணம் எடுக்கும் வரம்பு ரூ5,000 ஆக இருந்தது.

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடர்ந்திருப்பவர்களுக்கு 4% வட்டி வழங்கப்படுகிறது.இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ 500 இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதை கணக்கு வைத்திருப்பவர்கள் அறிந்திருக்க வேண்டும். இருந்தாலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ 500க்கு குறைவாக இருந்தால், கணக்கு பராமரிப்பு என்ற பெயரில் அஞ்சல்துறைக்கு நீங்கள் ரூ.100 அபராதம் கொடுக்க வேண்டியிருக்கும்.

Next Post

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி .. 24 மணி நேரத்தில் 1000பேருக்கு டெங்கு

Wed Sep 28 , 2022
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் ஜெட் வேகத்தில் பரவி வருவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 72 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஹவுரா, […]

You May Like