இன்றைய காலக்கட்டத்தில் நாகரீகமும், தொழில்நுட்பமும் மாறி வருகிறது. நமது உணவு, உடை இருப்பிடம் என அனைத்திலுமே மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று பெரும்பாலானோர் வீட்டில் சமைக்கும் உணவை விட கடையில் சமைக்கும் உணவை தான் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த பதிவில், வீட்டில் செய்யக்கூடிய உணவை உற்கொள்வதால் என்னென்னெ நன்மைகள் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ஒரு ஆய்வின்படி, வீட்டில் சமைக்கும் பெரியவர்கள் அடிக்கடி வெளியே சாப்பிடுபவர்களை விட அதிகமான உணவு வகைகளை உட்கொள்கின்றனர். வீட்டில் சமைக்க கூடிய உணவு, சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே, ஒவ்வொரு நாளும் உணவை ஆர்டர் செய்வதற்குப் பதிலாக, உங்கள் உணவை வீட்டிலேயே சமைக்கத் தொடங்குங்கள்.
பணத்தை சேமிக்கலாம்…
வீட்டில் சாப்பிடுவது பொதுவாக வெளியில் சாப்பிடுவதை விட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை ஷாப்பிங் செய்வதை விட மிகவும் குறைவான செலவாகும். தொடர்ந்து வெளியே சாப்பிடுவதை விட, ஒரே நேரத்தில் பல நாட்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தயாரிக்கலாம். மொத்தமாக வாங்கி, புதிதாக தயாரிக்கப்பட்ட உணவை உண்பதன் மூலம் பணத்தை சேமிக்கலாம்.
மன அழுத்தத்தை குறையும்…
சமைப்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. சமையலின் பொது வெட்டுவது மற்றும் கிளறுவது போன்ற இயக்கங்களில் ஈடுபடுவதால், சமைப்பது நமது உடலுக்கு சிகிச்சையாக கூட இருக்கும். நாம் செய்யக்கூடிய அற்புதமான உணவை அதன் முடிவில் நீங்கள் அனுபவிக்க முடியும் என்பதால் ஒரு நிறைவு உணர்வும் உள்ளது. நாமே சமைத்து சாப்பிடுவதால், நமது உடலுக்கு ஒரு உடற்பயிற்சி அளிப்பதோடு, ஆரோக்கியமான உணவை உட்கொள்ளவும் முடியும். இதனால், நமது உடலில் ஆரோக்கிய கேடுகள் ஏற்படாமல் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
தேவையற்ற நோய்களில் இருந்து பாதுகாக்கலாம்…
நமது முன்னோர்கள் வீடுகளில் தான் அதிகமாக உணவு தயாரித்து சாப்பிடுவர். இதனால், அவர்களது ஆயுட் காலம் நீடித்திருந்ததுடன், ஆரோக்கியமான வாழ்க்கையும் வாழ்ந்தனர். ஆனால், இன்று 40 வயதுக்கு மேல் நோயின்றி வாழ்வதே கேள்விக்குறியாக இருக்கிறது. மிக சிறிய வயதிலேயே, சர்க்கரை நோய், இதய நோய், புற்று நோய் என பல பாதிப்புகள் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் நமது ஒழுங்கற்ற உணவு முறையும் ஒரு காரணம் தான். நாம் வீதிகளில், கடைகளில் வாங்கி சாப்பிடக்கூடிய உணவுகளால் நமது உடல் சம்பந்தமான பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, முடிந்தவரை வீட்டில் சமைத்து சாப்பிடுங்கள்… ஆயுட்காலத்தை நீட்டியுங்கள்…
Read More : கர்ப்பிணி பெண்களுக்கு செம அறிவிப்பு..!! ஆதார் கட்டாயமில்லை..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!