சென்னையில் போக்குவரத்து விதியை மீறி வாகனங்கள் இயக்கப்படுவதால் சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சில தினங்களுக்கு முன்கூட சென்னை தரமணி சாலையில் 114km வேகத்தில் போன இரண்டு சிறுவர்கள் கட்டுப்பாட்டை இழந்து பலியான சம்பவம் நடந்துள்ளது. இது போன்ற விபத்துக்கு காரணம் போக்குவரத்து வீதிமீறள்கள் தான் , இதனால் சாலையில் நடந்து செல்லும் அப்பாவி மக்களும் பலியாகுகின்றனர்.
இது போன்ற சம்பவங்களை தவிர்த்து போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவர்களை கண்டுபிடிக்க புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது போக்குவரத்து காவல்துறை. இனி சென்னையில் வீதிமீறலில் ஈடுபடும் வாகனங்களை மக்களே இனி போட்டோ அல்லது வீடியோ எடுத்து 9003130103 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், அந்த வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை விரைவில் தமிழகம் முழுவதும் விரிவு படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.