fbpx

திருமணம் ஆகிவிட்டதா? அப்போ மத்திய அரசின் இந்த திட்டம் உங்களுக்குதான்.. ரூ.72,000 வருமானம் கிடைக்கும்!!

திருமணம் ஆனவர்கள், திருமணத்துக்கு திட்டமிட்டு இருப்பவர்கள் என பலரும் பயன் அளிக்கும் வகையில் மத்திய அரசு நிதி பாதுகாப்பு திட்டத்தை வைத்துள்ளது. அதாவது அமைப்புசாராத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான நிதிப்பாதுக்காப்பை வழங்கும் வகையில் மத்திய அரசு இந்த திட்டத்தை வடிவமைத்துள்ளது. அதாவது பிரதான் மந்திரி ஷ்ரம் யோகிமான் தன் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுகிறது.

2019 ஆண்டு மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதான் மந்திரி ஷ்ரம் யோகிமான் திட்டம் ஒரு ஓய்வூதியத் திட்டம் ஆகும். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வரும் இந்த திட்டத்தில் சேருவதற்கு திருமணம் ஆகி இருக்க வேண்டும். திருமணம் ஆனவர்கள் தங்களின் நிதி பாதுகாப்புக்கான இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். இதில் மாதம் 2,00 ரூபாய் முதலீடு செய்தால் ஆண்டு 72,000 ரூபாய் வரை வருமானம் பெற முடியும்.

குறிப்பாக சாலையோர வியாபாரிகள், மதிய உணவுத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், செங்கல் சூளைத் தொழிலாளர்கள், செருப்புத் தொழிலாளிகள், வீட்டுப் பணியாளர்கள், சலவை தொழிலாளர்கள், ரிக்‌ஷா க்காரர்கள், நிலமற்ற தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், பீடித் தொழிலாளர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் தொழிலாளர்கள் அல்லது மாத வருமானம் ரூ. 15,000/ அல்லது அதற்கும் குறைவாக உள்ள மற்றும் 18-40 வயதுடைய நுழைவு வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள்.

இத்திட்டத்தில் எப்படி இணைவது? சந்தாதாரர் மொபைல் போன், சேமிப்பு வங்கி கணக்கு மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை வைத்திருக்க வேண்டும். தகுதியான சந்தாதாரர் அருகிலுள்ள அரசு சேவை மையங்களுக்குச் சென்று, ஆதார் எண் மற்றும் சேமிப்பு வங்கிக் கணக்கு/ ஜன்-தன் கணக்கு எண்ணைப் பயன்படுத்தி சுய சான்றிதழின் அடிப்படையில் PM-SYM-க்கு பதிவு செய்யலாம்.

இத்திட்டத்தின் கீழ் திருமணமான தம்பதிகள் ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறுவது எப்படி? ஒரு தம்பதி ஆண்டுக்கு 72,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவது எப்படி என்பதை எளிய கணக்கீடு மூலம் எளிதாக புரிந்துகொள்ளலாம்.. உதாரணமாக, ஒரு நபருக்கு 30 வயது இருந்தால், தனிநபரின் மாதாந்திர பங்களிப்பு மாதத்திற்கு சுமார் ரூ. 100 ஆக இருக்கும்.. எனவே ஒரு தம்பதியினர் மாதத்திற்கு ரூ.200 செலவிடுகிறார்கள். எனவே, தனிநபர் பங்களிப்பு ஒரு வருடத்தில் ரூ. 1200 ஆக இருக்கும், 60 வயதை எட்டிய பிறகு, தனிநபர் ஓய்வூதியமாக ஆண்டுக்கு ரூ. 36,000 கிடைக்கும்.. அதாவது, தம்பதிகளுக்கு ரூ. 72,000 ஆண்டு ஓய்வூதியம் கிடைக்கும்..

Read more ; இந்த ஊசி HIV தொற்று அபாயத்தை 96% குறைக்கிறது..!! – ஆய்வில் தகவல்

English Summary

Are you married? Then this central government scheme is for you.. You will get income of Rs.72,000!!

Next Post

மாதம் ரூ.15,000-க்கும் மேல் சம்பளமா..? 4 சக்கர வாகனம் இருக்கா..? உங்களுக்கு இலவச வீடு கிடையாது..!! வெளியான புதிய நிபந்தனை..!!

Wed Dec 4 , 2024
New conditions have been imposed to benefit from the Prime Minister's Housing Scheme.

You May Like