fbpx

நீங்கள் 18 வயதை கடந்துவிட்டீர்களா..? ஆதார் அட்டையில் வந்த புதிய மாற்றம்..!! மறந்துறாதீங்க..!!

இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் முதன்முறையாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது பாஸ்போர்ட் பாணியில் உடல் ரீதியான பரிசோதனை செய்யப்படும் என்று சமீபத்திய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் ஆதார் அட்டை தனிநபர் அடையாள அட்டையாக பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல்வேறு விதமான அரசு சார்ந்த திட்டங்கள், வங்கிக் கணக்கு திறத்தல், சிம் கார்டு வாங்குதல் போன்ற விஷயங்களுக்கு ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய குடிமக்கள் அனைவரும் ஆதார் எண் வைத்திருப்பது மிக அவசியமாக இருக்கிறது. 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முதன்முறையாக ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது, மாநில அரசின் ஒப்புதலுடன், உடல் ரீதியான பரிசோதனைக்கு உட்படுவார்கள் என்று யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா (Unique Identification Authority of India – UIDAI) சமீபத்தில் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, இனி வரக்கூடிய நாட்களில் ஆதார் வழங்குவதற்கான முழு செயல்முறையையும் மாநில அரசு ஏற்று நடத்தும். இதுவரை இதற்கு UIDAI பொறுப்பேற்றுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்காக மாநில அரசு ஒருங்கிணைப்பு அலுவலகர்கள் மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் ஆகியோரை மாவட்ட மற்றும் துணை பிரிவு நிலைகளில் நியமிக்கும் என கூறப்படுகிறது. இந்த பிரிவின் கீழ் வரக்கூடிய நபர்கள், நியமிக்கப்பட்ட ஆதார் மையங்கள் மூலமாக ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.

இந்த பிரிவின் கீழ் உள்ள தனி நபர்களின் அனைத்து ஆதார் விண்ணப்பங்களும் வெரிஃபிகேஷனுக்கு பிராசஸ் செய்வதற்கு முன் சர்வீஸ் போர்ட்டல் மூலமாக டேட்டா குவாலிட்டி பரிசோதிப்பு செய்யப்படும். சர்வீஸ் ஹோட்டல் வாயிலாக பெறப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கான வெரிஃபிகேஷன் செயல்முறையையும் துணை பிரிவு நிலையில், உள்ள நீதிபதிகள் (SDMகள்) கண்காணிப்பார்கள். அதன் பிறகு 180 நாட்களுக்கு உள்ளாக அந்தந்த நபர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்.

Chella

Next Post

இந்திய விமானப்படையில் வேலை..!! ரூ.1,77,500 வரை சம்பளம்..!! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்கியாச்சு..!!

Mon Dec 25 , 2023
இந்திய விமானப்படையில் (IAF) வேலைவாய்ப்பு பெற சூப்பர் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. விமானப்படை பொது நுழைவுத் தேர்வு மூலம் நீங்கள் படையில் சேரலாம். இந்தப் பணியில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான afcat.cdac.in மூலம் டிசம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 01 ஜனவரி 2025 தேதியின்படி வயது 20 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். கிரவுண்ட் டூட்டி (தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத) கிளை: […]

You May Like