fbpx

அவசர தேவைக்காக கிரெடிட் கார்டில் பணம் எடுக்குறீங்களா..? சிக்கலில் மாட்டிக்காதீங்க..!!

சிறிய அளவிலான அவசரகால நிதி திரட்டுவதற்கு சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட்கள் போதுமானது. ஆனால், அவசரமாக பெரிய அளவிலான தொகை தேவைப்பட்டால், நீங்கள் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், தற்போதைய இளைஞர்கள் கிரெடிட் கார்டு மூலமாக தங்களுடைய அவசரகால நிதி தேவையை சமாளிக்கின்றனர். உண்மையில் இது ஒரு புத்திசாலித்தனமான யோசனையா? கிரெடிட் கார்டை உங்களுடைய முதன்மை அவசரகால நிதியாக கருத்தில் கொள்வது சரியா? இல்லவே இல்லை. கிரெடிட் கார்டுகள் உங்களுடைய அவசர கால நிதியின் மாற்றீடாக இருப்பது நல்ல யோசனை கிடையாது.

மிகச் சிறிய அளவிலான அவசரகால பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உண்மைதான். ஆனால், பில் வரும்போது அதனை நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். ஆகவே, குறுகிய கால அடிப்படையில் பணத்தேவையை சமாளிப்பதற்கு மட்டுமே கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்படலாம். அதிகப்பட்சமாக கிரெடிட் கார்டுகள் நீங்கள் ட்ரான்ஸ்ஷாக்ஷன் செய்த 30 முதல் 40 நாட்களுக்கு உள்ளாக மட்டுமே வட்டி இல்லாத கால அவகாசத்தை தருகிறது. பிறகு உங்களுடைய கடனை நீங்கள் திருப்பிs செலுத்த வேண்டும். ஒருவேளை அதனை உங்களால் முழுதாக திருப்பி செலுத்த முடியாமல் போனால் ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகையில் 40 சதவீதம் வட்டியாக வசூலிக்கப்படும்.

உதாரணமாக நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் 2.5 லட்சம் ரூபாய் பணத்தை பயன்படுத்தி விட்டதாக வைத்துக் கொள்வோம். இதற்கு நீங்கள் ஒரு வருடத்திற்கு 35 முதல் 40% வட்டி அல்லது ஒவ்வொரு மாதமும் 3 முதல் 4 சதவீத வட்டி செலுத்த வேண்டும். மொத்த தொகையையும் நீங்கள் திருப்பி செலுத்தும்வரை ரூ.2.5 லட்சம் + வட்டி விகிதம் + ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் ஆகியவற்றை செலுத்த வேண்டியிருக்கும். எனவே உங்களிடம் இதுவரை எந்த ஒரு அவசரகால நிதி இல்லை என்றால் இன்று முதல் அதனை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவது புத்திசாலித்தனம். அதனை நீங்கள் ஒரே இரவில் திரட்டி விட முடியாது. அதற்கு ஒரு சில மாதங்களோ அல்லது வருடங்களோ கூட ஆகலாம். ஏதேனும் நீண்ட கால முதலீடுகளை செய்து வருகிறீர்கள் என்றால் தற்காலிகமாக அதனை நிறுத்தி வைத்து விட்டு உங்களுடைய அவசரகால நிதியை திரட்டுவதில் முதலில் கவனம் செலுத்துங்கள்.

Read More : கஞ்சா விற்கும் குற்றவாளியுடன் கூட்டு..!! தலைமைக் காவலர் சிக்கியது எப்படி..? மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

Savings account and fixed deposits are sufficient for accumulating small emergency funds.

Chella

Next Post

இணையதள அடிமையா நீங்கள்? சரி செய்ய 5 டிப்ஸ் இதோ!!

Fri Jun 14 , 2024
Internet Addiction Disorder (IAD) is excessive internet use that interferes with daily life. Learn effective strategies to regain control and balance offline activities for a healthier lifestyle.

You May Like