வேலைக்கு செல்லும் கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியம் குறித்தும், பின்பற்றவேண்டிய உணவு பழக்கங்கள் உள்ளிட்டவைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பெண்கள் தங்கள் வாழ்நாளில் வழக்கத்தை விட கர்ப்பகாலத்தில்தான் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த காலத்தில், பெண்ணின் உடலில் பல மாற்றங்களால், சற்று அசெளகரியமாக உணருவார்கள். குமட்டல், மனநிலை மாற்றங்கள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படும்.நிலையில் வேலைக்கு செல்லும் பெண்கள் இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்தவகையில், அதிக நேரம் வேலை செய்யும் போது உடல் சோர்வை உண்டு செய்யும். சோர்வாக இருக்கிறது என்று ஒரே இடத்தில் உட்கார கூடாது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் படுத்து கிடக்க கூடாது. இதனை தவிர்க்கும் வகையில், வேலைக்கு இடையே சில நிமிடங்கள் எழுந்து நடந்து வருவது சோர்வை நீக்கும்.
வேலைக்கு செல்லும் கர்ப்பிணிகள், புரதம் நிறைந்த கோழி இறைச்சி, கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், பருப்பு, தானியங்கள். பீன்ஸ் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்கவேண்டும். புதிய பழச்சாறுகளை சாப்பிடலாம். தீங்கு விளைவிக்கும் சோடாக்கள் மற்றும் காஃபின் அளவு குறைக்கவும்.
நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு சோர்வு உணர்வு குறைய உடற்பயிற்சி உதவும் பயனுள்ளதாக இருக்கும். கால்களை முழுமையாக தொங்கபோட்டு உட்கார கூடாது. இது கால்களில் திரவங்கள் தேங்க வழிவகுக்கும்.உட்காரும் போது நன்றாக முதுகு சாய்ந்தாற்போன்று நேராக நீட்டி நாற்காலிகாலியை பயன்படுத்தலாம்.
மேலும், கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்பவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆற்றலை குறைக்கும். எனவே சக பணியாளர்களுடன் வேலையை பகிர்ந்து செய்வதன் மூலம் மன அழுத்தம் குறையலாம். இடைவிடாத வேலை நேரத்தில் சில நிமிடங்கள் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திகொண்டு மூச்சை மெதுவாக ஆழ இழுத்துவிடுங்கள்.
கர்ப்பகாலத்தில் வேலைக்கு செல்லும் போது இறுக்கமான மற்றும் ஃபேஷன் ஆடைகள், ஹை ஹீல்ஸ் காலணிகள் அணிவதை தவிருங்கள். அதற்கு மாற்றாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கையுடன் இருங்கள். கர்ப்பகால இறுதியில் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது.