fbpx

நீங்கள் அறிவிக்க தயாரா..? அன்புமணி ராமதாஸ், திருமாவளவனுக்கு சீமான் சவால்..!!

ராஜபாளையத்தில் விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பேசிய சீமான், ”வருகிற உள்ளாட்சி தேர்தல், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு செய்வதற்காகக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 36 லட்சம் பேரில் புதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றத்தை விரும்பும் வாக்காளர்கள் அதிகளவில் உள்ளனர்.

சாதி, மதம், சாராயம், பணம், திரைக் கவர்ச்சி ஆகியவை நல்ல அரசியலை முன்னெடுக்க தடையாக இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்தவர்களுக்கு மட்டும் சின்னம் ஒதுக்கப்பட்டது. விசிக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதில் எனக்கு ஐயமில்லை. அதிமுகவை விசிக அழைப்பதை வரவேற்கிறேன். ஆனால், பாஜக மதவாத கட்சி, பாமக சாதி கட்சி என்கிற திருமாவளவன், மதுவாத கட்சியான திமுகவுடன் எப்படி கூட்டணி வைத்துள்ளார்..?

சாதி வாரிக் கணக்கெடுப்பு பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது. மத்திய அரசு தான் சாதிவாரி கண்கெடுப்பை நடத்த வேண்டும் என முதல்வர் முக.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை. மது விலக்கு மாநாடு நடத்துவது காலம் கடந்த முடிவு. சாதி வாரிக் கணக்கெடுப்பையும், மதுவிலக்கையும் அமல்படுத்துபவர்கள் உடன் மட்டுமே கூட்டணி வைப்போம் என ராமதாஸும், திருமாவளவனும் அறிவிக்கத் தயாரா? என சீமான் சவால் விடுத்துள்ளார்.

Read More : உடல் எடையை அசால்ட்டாக குறைக்கும் மாங்காய் ஜூஸ்..!! இப்படி செய்து குடிச்சிப் பாருங்க..!!

English Summary

Anbumani Ramadoss, Seeman challenge to Thirumavalavan

Chella

Next Post

வியட்நாமை சூறையாடிய யாகி!. பலி எண்ணிக்கை 226ஆக உயர்வு!. 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை!

Fri Sep 13 , 2024
Yagi looted Vietnam! Death toll rises to 226! More than 100 people are missing!

You May Like