கோடை வெயிலுக்கு இதமான உணர்வை அளிக்கும் ஐஸ் க்ரீம்களை எப்படி முறையாக சாப்பிட வேண்டும்..? எவ்வளவு அளவு சாப்பிடுவது நல்லது..? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நம் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை. அவை, குறைவாக இருந்தால் நோய் ஏற்படும். நம் உடல் நமக்கு சில சிக்னல்களை அனுப்பும். அதைக் கண்டறியும் சக்தி இருந்தால், நம் ஆரோக்கியத்தைப் பேணுவது எளிது. நம்மில் பலருக்கு ஐஸ் சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். மேலும், ஐஸ் கட்டிகளை அப்படியே சாப்பிடுவதையும் சிலர் செய்வார்கள். இதனால் வாய் மற்றும் உடல் குளிர்ச்சியாக இருக்கும். உங்களுக்கும் ஐஸ் கட்டிகள் சாப்பிடும் பழக்கம் இருந்தால் கவனமாக இருங்கள். இது ஒரு வகையான நோய்.
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, நீரிழிவு, இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோய் போன்ற பயங்கரமான நோய்களிலிருந்து நம் உடலைப் பாதுகாக்கிறது. உடலுக்குச் சரியான சத்துக்கள் கிடைக்காவிட்டால், உடல் நோயால் பாதிக்கப்படும். வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இல்லாதது நம்மை படுத்த படுக்கையாக ஆக்குகிறது. நம் உடலில் வைட்டமின் மற்றும் மினரல் குறைபாடு குறைவாக இருப்பதை நம் உடல் பல வழிகளில் காட்டுகிறது.
கோடையில் குளிர்ச்சியான ஐஸ் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், சிலருக்கு சீசன் பாராமல் ஐஸ் சாப்பிட ஆசை இருக்கும். ஐஸ் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் ரத்த சோகையை காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். இரத்த சோகை பிரச்சனை நீங்குவதால், ஐஸ் சாப்பிடும் ஆசை குறைகிறது. மாற்றாக, உங்கள் உணவில் கோழி, முட்டை, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஐஸ் க்ரீமில் கால்சியம், வைட்டமின் டி, ஏ போன்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இவையாவும் உடல் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துக்கு உதவுகிறது.
ஐஸ்க்ரீம்களின் அதிகப்படியான, நுகர்வு நம் இரத்த சக்கரை அளவில் மாற்றத்தை உண்டாக்கலாம். அந்த வகையில், இது சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். மேலும், இது இரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரிக்கலாம். இதன்விளைவாக இரத்த அழுத்த பிரச்சனைகள் மற்றும் இதய ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நிபுணர்கள் கூற்றுப்படி, ஐஸ் க்ரீம்களை தினமும் சாப்பிடுவது நல்லதல்ல. ஐஸ் க்ரீமின் தொடர்ச்சியான நுகர்வு பற்சிதைவு, இரத்த அழுத்தம், இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
ஐஸ்க்ரீமில் காணப்படும் அதிகப்படியான கொழுப்பு உங்கள் செரிமான செயல்பாட்டை பாதிக்கலாம். எனவே, இரவு நேரங்களில் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. அதாவது, ஐஸ் க்ரீம்களை காலை நேரங்களில் சாப்பிடுவது நல்லது. உணவுக்கு பின் ஐஸ்க்ரீம்களை சாப்பிட்டால் புத்துணர்ச்சி மற்றும் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
கொழுப்பு நிறைந்த ஐஸ் க்ரீம்களை காலை நேரத்தில் சாப்பிடக்கூடாது. இதில் காணப்படும் சர்க்கரை உள்ளடக்கம் கல்லீரல் சேதம் மற்றும் அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். ஐஸ்க்ரீம்களை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. சர்க்கரையின் அளவை பொறுத்து ஐஸ்க்ரீம்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தவகையில் நீங்கள் எடுத்துக்கொள்ளப்படும் கலோரியின் அளவில் 10% அளவுக்கு மட்டும் ஐஸ் க்ரீம் இருக்க வேண்டும்.